காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல் - 35 பேர் மீட்பு
#SriLanka
#Accident
#Iran
#Rescue
#Ship
#L4
Prasu
4 hours ago
இன்று காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 மைல் தொலைவில் ஆழ்கடலில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கப்பலில் இருந்து அவசர அபாயச் சிக்னல்(SOS) அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையும் விமானப்படையும் உடனடி மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
கப்பல் விபத்துக்கான காரணம் தொழில்நுட்ப கோளாறா அல்லது மோசமான வானிலையா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விபத்து நடந்த நேரத்தில் 'IRIS Dena' கப்பலில் 180 பேர் இருந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )