11 மணி நேரம் கடந்தும் ஈரானிய கப்பலை காலி துறைமுகத்தில் தரித்து நிறுத்த அனுமதி வழங்காமைக்கு காரணம் என்ன ?

#SriLanka #Iran #Ship #Permission #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
2 hours ago
11 மணி நேரம் கடந்தும் ஈரானிய கப்பலை காலி துறைமுகத்தில் தரித்து நிறுத்த அனுமதி வழங்காமைக்கு காரணம் என்ன ?


11 மணிநேரம் கடந்தும் ஈரானிய கப்பலை காலி துறைமுகத்தில் தரித்து நிறுத்த அனுமதி வழங்காமைக்கு காரணம் என்ன என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். இந்தியக் கடற்படைப் பயிற்சியில் மொத்தம் 74 நாடுகள் பங்கேற்றன.

இதில் 42 கப்பல்களும், 29 விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன. இலங்கையின் நந்திமித்ர (Nandimithra) வகை போர்க்கப்பல் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டது. பயிற்சியை முடித்துக்கொண்டு இந்தியாவிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு, ஈரான் கப்பல் நாடு திரும்ப முயன்றது.வளைகுடா பிராந்தியத்தில் (Gulf region) அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் இருந்ததால், ஈரான் கப்பலால் அந்த வழியாகச் செல்ல முடியவில்லை.

ஈரான் கப்பல் பின்வாங்கி, காலி (Galle) துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டது.இக்கப்பல் அங்கு சுமார் 11 மணிநேரம் தங்கியிருந்ததுடன், துறைமுகத்திற்குள் நுழைய இலங்கை அரசிடம் அனுமதி கோரியது.

11 மணிநேரத் தாமதத்திற்குப் பிறகு, இந்தத் தகவல் அமெரிக்கப் படைகளுக்குச் சென்றுள்ளது.வளைகுடா பிராந்தியத்தில் இருந்து அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் (Submarine), ஈரான் கப்பலைத் தாக்குவதற்காக அந்த இடத்திற்கு வந்துள்ளது.

இந்திரா காந்தி காலத்தில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியப் பெருங்கடலை ஒரு அமைதி வலயமாக (Peace zone) பேணுவதற்கான சர்வதேச சட்டங்கள் பல உள்ளன. 

அவற்றில் எம்முடைய நாடும் கையொப்பமிட்டுள்ளது. இத்தகைய பின்னணியில் குறித்த கப்பல் வருகை தந்து 11 மணி நேரம் கடந்தும் கூட எம்முடைய துறைமுகத்திற்கு குறித்த கப்பலை அனுமதிக்காமையின் காரணம் என்ன என்று வினவ விரும்புவதாக அவர் தெரிவித்தார்.


இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!