அர்ச்சுனாவின் சந்தேகம்: இரணைமடு சம்மேளனம் அரசாங்கதிபரிடம் மகஜர்!

#SriLanka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 hours ago
அர்ச்சுனாவின் சந்தேகம்: இரணைமடு சம்மேளனம் அரசாங்கதிபரிடம் மகஜர்!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி பாராளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்த கருத்துக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உண்மை தன்மையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் தருமாறு வலியுறுத்தியும் பாராளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனாவின் சந்தேகங்களை தெளிவு படுத்தியும் மாவட்ட அரசாங்கதிபரிடம் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள் மாவட்ட அரசாங்கதிபரிடம் மகஜர் கையளித்தனர்.

குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயமாவது 25.2.2026 நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டடம் தொடர்பாக மேற்படி தினத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்சுனா அவர்களால் மேற்படி எமது சம்மேளனத்தின் மீது மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

அன்றைய கூட்டத்திற்கு எம்மை அழைக்காமையால் நாம் அங்கு சமூகமாகவில்லை. அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிகழ்ச்சிநிரலில் இல்லாத ஒரு விடையத்தை அதிகாரிகள் கையில் உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் மிகமோசமான வார்த்தைகளால் எமது சம்மேளனம் விமர்சிக்கப்பட்டுள்ளது. 

என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதோடு எமது பக்க நியாயங்களையும், உண்மைகளையும் தங்களின் மேலான கவனத்திற்கு தருகிறோம் ஆராய்ந்து ஏற்ற ஆவன செய்வீர்கள் என நம்புகிறோம். "இரணைமடுக்குள கமக்காரர் அமைப்புகளின் சம்மேளனம்"பதிவு அற்றதாக தெரிவித்துள்ளார். 

2013ம் வருடம் எமது சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டு 2016ம் வருடம் கமநல அபிவிருத்தி தினைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு உபசட்டவிதிகள் அங்கிகரிக்கப்பட்டு, வங்கி நடைமுறைகள், ஒப்பந்த வேலைகள் செய்யப்பட்டு முழுமையான செயற்பாட்டு அமைப்பாக இன்றுவரை இயங்கிவருகின்றது. 

2022ம் வருடம் தற்போதைய பிரதி கமநல அபிவிருத்தி ஆணையாளர் "சமமேளனம்" என பெயரிட்டு இருப்பது சட்ட ஏற்பாட்டுக்கு ஏற்புடையதாக இல்லாது இருப்பதால் பொதுக்கூட்டம் கூடி பெயர்மாற்றம் செய்து தருமாறு கோரி இருந்தார். இதன் பிரகாரம் பெயர் மாற்றம் மேற்கொண்டுள்ளோம்.

2. கோடிக்கணக்கான பணங்கள் சேகரித்து மோசடி செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். எமது கணக்குகள் அரசால் அங்கிகரிக்கப்பட்ட கணக்காய்வு நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு பிரதிகள் மாவட்ட பிரதி ஆணையாளர் மற்றும் பொதுச்சபை உறுப்பினர்களுக்கும் வழங்கி பொதுமக்கள் பார்வைக்கும் எமது காரியாலயத்தில் ஒட்டி பொதுச்சபை கூட்டத்தில் சமர்ப்பித்து அங்கிகரிக்கப்பட்ட அறிக்கை. இதில் பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனாவால் சபையில் கூறிய 2019ம் ஆண்டில் இரணைமடு சம்மேளனத்தால் சேகரிக்கப்பட்ட 25451949ரூபா நிதி விபரம் கோப்பா குழுவில் இருந்து பெற்றதாக தெரிவித்திருந்தார். 

இது எமது கணக்கறிக்கையில் 01.01.2019 ல் மொத்தப் பொறுப்பு ஆகும்.

இதில் நடைமுறை அல்லாத சொத்துக்களின் பெறுமதி (கட்டடங்கள்) 25300002ரூபா என்பதை அர்சுனாவால் புரிந்து கொள்ள முடியவில்லை எனவே ஒவ்வோர் ஆண்டின் மொத்த பொறுப்பிலும் இவ் நடைமுறை அல்லாத அசையா சொத்துக்களின் பெறுமதி வரும்.

3. இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்து வயல் நிலங்களிற்கு உரமானியம் வழங்கியது என தெரிவித்துள்ளார். இதற்கும் எமது சம்மேளனத்திற்கும் எதுவித தொடர்பும் இல்லை. 

ஆயினும் 2021.3.25 இரணைமடு பயிர்செய்கை குழு கூட்ட தீர்மானப்படி இராணுவத்தினர் வைத்துள்ள அரச பண்ணை காணி 65 ஏக்கருக்கு நீர் வழங்க தீர்மானிக்கப்பட்டது அதன்படி உரம் வழங்கப்பட்டிருக்கலாம்.

எனவே மேற்படி அவரின் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் முற்றாக நிராகரிப்பதுடன் அனைத்திற்கும் ஆவணரீதியான சான்றுகளை சமர்ப்பித்து எமது தரப்பு உண்மையை உறுதிப்படுத்த தயாராக உள்ளோம். 

எனவே எமக்கான வாய்ப்பை விரைந்து ஏற்படுத்தி தர வேண்டுகிறோம். பிரதிகளாக 

 1 தலைவர் அவர்கள் தங்களின் மேலான கவனத்திற்கு. கோப்பா குழு இலங்கை பாராளுமன்றம்

 2 கௌரவ சி.சிறிதரன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் யாழ் தேர்தல் மாவட்டம்.

 3 கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் யாழ் தேர்தல் மாவட்டம்.

 4 கௌரவ யெ.றஜீவன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் யாழ் தேர்தல் மாவட்டம்.

 5 கௌரவ இ.அர்சுனா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் யாழ் தேர்தல் மாவட்டம்.

 6 அரசாங்க அதிபர் அவர்கள் மாவட்ட செயலகம் கிளிநொச்சி.

 7 பிரதி ஆணையாளர் அவர்கள் கமநல அபிவிருத்தி திணைக்களம் கிளிநொச்சி,

 8 பிரதிப்பணிப்பாளர் அவர்கள் நீர்ப்பாசன திணைக்களம் கிளிநொச்சி.

 9 பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அவர்கள் விரிவாக்கம் கிளிநொச்சி.

 10 பணிப்பாளர் அவர்கள் தேசிய கணக்காய்வு திணைக்களம் மாவட்ட செயலகம் கிளிநொச்சி. பிரதிகள் வழங்கினர்.



இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!