போலி உறுதிப்பத்திரம் தயாரித்த சட்டத்தரணிக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை!!

#SriLanka #Prison #Lawyer #Fake #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
5 hours ago
போலி உறுதிப்பத்திரம் தயாரித்த சட்டத்தரணிக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை!!

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12 ஆண்டுகள் சாதாரண சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

நீண்ட விசாரணைக்குப் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்னவினால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. பொரளை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றிற்கு போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்தமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் இந்த சட்டத்தரணிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த சட்டத்தரணிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு குற்றச்சாhட்டிற்கும் தலா 6 ஆண்டுகள் வீதம், இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் மொத்தமாக 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இந்த இரண்டு தண்டனைகளும் ஏககாலத்தில் (ஒரே காலப்பகுதியில்) அனுபவிக்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதற்கமைய, அவர் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்ட சட்டத்தரணி 61 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் என்பது வழக்கு விசாரணையின் போது தெரியவந்தது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!