ஈரானிய கப்பலில் உள்ள 200க்கும் மேற்பட்டோரை கொழும்பு அழைத்து வர நடவடிக்கை
#SriLanka
#Colombo
#Iran
#Rescue
#AnuraKumaraDissanayake
#Ship
#L4
Prasu
4 hours ago
ஈரானுக்குச் சொந்தமான ஐரிஸ் புஷேஹ்ர் கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அக்கப்பலில் இருந்த 208 பணியாளர்களை தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் தெரிவித்துள்ளார்.
இதன்போது, இலங்கையின் நிலப்பரப்பு, கடல் எல்லைகள் மற்றும் வான்பரப்பு ஆகியவற்றை எந்தவொரு அரசும் மோதல்களின் போது ஒரு தரப்பிற்கு ஆதரவாகப் பயன்படுத்துவதற்கோ அல்லது வேறு நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பயன்படுத்துவதற்கோ இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
(வீடியோ இங்கே )