இன்றைய ராசிபலன் (06.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #L4
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (06.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம் 

அசுவினி: மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பரணி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வரவேண்டிய பணம் வரும். கார்த்திகை 1: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர். 

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். நேற்றைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். ரோகிணி: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். மிருகசீரிடம் 1,2: உங்களிடம் உதவி கேட்டு உறவினர் வருவர். நீண்டநாள் கனவு நனவாகும்.

மிதுனம் 

மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வரவு அதிகரிக்கும். திருவாதிரை: சிலர் நண்பர்களுடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். பயணத்தில் நிதானம் அவசியம். புனர்பூசம் 1,2,3: வேலைப்பளு அதிகரிக்கும். பழைய பிரச்னை ஒன்றுக்கு முடிவு கட்டுவீர். 

கடகம் 

புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். விழிப்புடன் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர். பூசம்: நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆயில்யம்: வேலைப்பார்க்கும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். 

சிம்மம் 

மகம்: இன்று நெருக்கடிகளை சந்தித்தாலும் அதில் இருந்து வெளியில் வருவீர்கள். பூரம்: மனதில் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உத்திரம் 1: உங்கள் வார்த்தைகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். பிறரை அனுசரித்துச் செல்லுங்கள். 

கன்னி 

உத்திரம் 2,3,4: யோகமான நாள். உறவினர்கள் மத்தியில் உங்கள் நிலை உயரும். அஸ்தம்: குடும்பத்தினர் தேவையறிந்து நிறைவு செய்வீர். மனம் தெளிவடையும். சித்திரை 1,2: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். கோயிலுக்கு செல்வீர்கள். 

துலாம்

சித்திரை 3,4: செலவு அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். சுவாதி: வேலைப்பளு கூடும் என்றாலும் வரவு அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். விசாகம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த வருவாய் வரும். 

விருச்சிகம்

விசாகம் 4: சகபணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனம் தெளிவடையும். அனுஷம்: பொருளாதார நிலை உயரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.

தனுசு

மூலம்: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். விழிப்புடன் செயல்படுவீர். பூராடம்: உங்கள் அணுகுமுறை ஆதாயத்தை உண்டாக்கும். வருமானம் திருப்தி தரும். உத்திராடம் 1: எதிர்பார்த்த தகவல் வரும். பெரியோர் ஆசியுடன் வேலையில் ஆதாயம் காண்பீர். 

மகரம் 

உத்திராடம் 2,3,4: திருப்புமுனையான நாள். உங்களுக்கு இருந்த சங்கடங்கள் விலகும். திருவோணம்: வியாபாரம் முன்னேற்றம் அடையும். சகாய சனியால் நன்மை உண்டாகும். அவிட்டம் 1,2: எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர்.

கும்பம் 

அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உழைப்பு அதிகரிக்கும். சதயம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் அமைதி காப்பது நன்மையாகும். பூரட்டாதி 1,2,3: மனதில் குழப்பம் அதிகரிக்கும். உடன் இருப்போரே உங்களை சங்கடப்படுத்துவர். 

மீனம் 

பூரட்டாதி 4: குடும்ப பிரச்னை நீங்கும். புதிய வீடு கட்டும் முயற்சியை மேற்கொள்வீர். உத்திரட்டாதி: பொருளாதார நிலை உயரும். உறவினர்கள் வீடுதேடி வருவர். ரேவதி: பணவரவில் ஏற்பட்ட தடை விலகும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்னை தீரும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!