கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக வலைத்தளம் பயன்படுத்த தடை
#India
#children
#Mobile
#Banned
#Karnataka
Prasu
2 months ago
கர்நாடகாவின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெடை மாநில முதல்வர் சித்தராமையா சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதன்போது, கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களுக்கு சிறுவர்கள் அடிமையாவதைத் தடுக்கவும் அவர்களின் மனநலத்தை பாதுகாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தத் தடையை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து நிபுணர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
(வீடியோ இங்கே )