அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்: சபையில் சர்ச்சை!

#SriLanka #Parliament #Sajith Premadasa #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
9 hours ago
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்: சபையில் சர்ச்சை!

அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும்போது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நுழைந்ததா என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று கூடியது. இதன் போதே அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார்.

"எமது நாட்டின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (Exclusive Economic Zone) அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று வந்திருந்தது என்பது உங்களுக்குத் தெரியாதா? 'ஐரிஸ் டென்னா' ((Iris Deanna) எனப்படும் ஒரு போர்க்கப்பல் (Frigate) - அது ஒரு 'மௌட்ஜ் ரக' (Moudge class) போர்க்கப்பல் - அதன் மீது நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து 'மார்க் 48' (Mark 48) ரக பாரிய டார்பிடோ (Heavyweight torpedo) ஏவுகணை ஒன்று ஏவப்பட்டது.

தேசிய பாதுகாப்பு மிகவும் உச்சத்தில் இருப்பதாகக் கூறப்படும் ஒரு தருணத்தில், எமது நாட்டின் நிலப்பகுதியிலிருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பால் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் வரும்போது, அதைக் கண்டறிய எம்மிடம் மேற்பரப்பு ரேடார் (Surface radar) இல்லையா? சோனோபாய்ஸ் (Sonobuoys) இல்லையா? நீருக்கடியிலான சோனார் வலையமைப்புகள் (Underwater sonar networks) இல்லையா? இழுத்துச் செல்லப்படும் சோனார் (Towed sonar) கருவிகள் இல்லையா? செயற்கைக்கோள் கண்காணிப்பு (Satellite surveillance) வசதிகள் இல்லையா?

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பதாகக் கூறப்படும் ஒரு நிலையில்தான் எமது பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 

இதிலிருந்தே எமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள கதியை நாம் புரிந்துகொள்ளலாம். இப்போது 208 பேர் காப்பாற்றப்பட்டதாகக் கூறப்பட்டது, அது மிகவும் நல்ல விடயம். 

அதற்காக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் 208 பேரைக் காப்பாற்றுவதற்கு முன்னதாக 130 இற்கும் அதிகமானோர் தமது உயிரைத் தியாகம் செய்துள்ளனர். 

அது எப்படி நடந்தது? எமது நாட்டின் கடற்பரப்பான (Territorial sea) 12 கடல் மைல்களுக்குள் அந்தப் போர்க்கப்பல் இருந்திருந்தால் அந்த 130 பேரையும் காப்பாற்றியிருக்கலாம்.

இப்போது 130 பேரைக் காப்பாற்ற முடியாத ஒரு சூழலில், குறைந்தபட்சம் 208 பேரைக் காப்பாற்றியது மிகப்பெரிய விடயம் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!