படைவீரர் குடும்பங்களுக்கு நற்செய்தி: பிள்ளைகளின் உயர்கல்விக்கு விசேட நிதி ஒதுக்கீடு!
முன்னாள் படைவீரர்கள், போரில் உயிர்நீத்த மற்றும் அங்கவீனமுற்ற வீரர்களின் பிள்ளைகளுக்கு கல்வி புலமைப்பரிசில்கள் மற்றும் கல்வி உதவிகளை வழங்கும் நிகழ்வு நேற்று ரணவிரு சேவா அதிகாரசபையினால் நடாத்தப்பட்டது.
நிகழ்வின் போது, பார்வை குறைபாடு கொண்ட மாணவர் ஒருவருக்கு அடையாள ரீதியாக பாதுகாப்பு செயலாளரால் மடிக்கணினி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் காவல்துறை குடும்பங்களைச் சேர்ந்த, உயர்கல்விக்குத் தகுதி பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட 32 துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு, அவர்களது நான்கு ஆண்டு கால பட்டப்படிப்பை நிறைவு செய்ய இந்த உதவி வழங்கப்படும்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்