சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே ஈரானிய கப்பல் விவகாரத்தில் முடிவு: இலங்கை அரசாங்கம் அறிவிப்பு!!

#SriLanka #government #International #Iran #Ship #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 hours ago
சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே ஈரானிய கப்பல் விவகாரத்தில் முடிவு: இலங்கை அரசாங்கம் அறிவிப்பு!!

ஈரானிய கப்பல்களிலிருந்து மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச கடல்சார் சட்டங்கள் பின்பற்றப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இடம்பெற்ற RAISINA மாநாட்டில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது, இலங்கைக்கு அப்பாலான கடற்பரப்பில் இடம்பெற்ற அமெரிக்க நடவடிக்கை, இலங்கையின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது தொடர்பான விடயங்கள் குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத், இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகளின் கடல்சார் சாசனம் அதாவது சர்வதேச சட்டங்களை பின்பற்ற வேண்டி ஏற்படும் என நினைக்கிறேன்.

இதில் இந்து சமுத்திர விளிம்பு நாடுகளினது சங்கங்களின் நீல பொருளாதார சட்டகம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான மூலோபாய செயற்பாடுகள் ஆகிய இரண்டு விடயங்கள் தொடர்பில் கருத்திற்கொள்ள வேண்டும்.

இலங்கை இந்த விடயங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் 2025 ஆம் ஆண்டில் இணக்கப்பாடுகளை எட்டியுள்ளது.

எம்மால் சர்வதேச சட்டங்களை மீண்டும் உறுதிப்படுத்த முடியுமானால், எந்தவொரு சவால்களுக்கு இலங்கையினால் முகங்கொடுக்க முடியும்.

உலகின் பல நாடுகளை போலவே, ஒரு நாடாக இலங்கையும் பல சவால்களுக்கு முகங்கொடுக்கிறது எனவே, நாம் சர்வதேச சட்டங்களை பலப்படுத்த வேண்டும் என்பதுடன், அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே, ஈரானிய கப்பல்களிலிருந்து மீட்கப்பட்டவர்கள் மீள ஒப்படைக்கப்படுவார்களா? என அமைச்சர் விஜித ஹேரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், “நாம் இந்த போர் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் எந்தவொரு தரப்புக்கு ஆதரவாக செயற்படவில்லை. நாம் மனிதாபிமான அடிப்படையில் செயற்படுகிறோர்.

சர்வதேச சட்டங்களை மதிக்கிறோம். எனவே, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அதனடிப்படையிலே இலங்கை எடுக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னதாக ஈரானிய கப்பல்களிலிருந்து மீட்கப்பட்டு இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ள மாலுமிகளை ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தகவல்கள் வெளியாகின.

இந்த விடயங்கள் கசிந்துள்ள உள்நாட்டு ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!