இன்றைய ராசிபலன் (11.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #L4
Prasu
2 hours ago
இன்றைய ராசிபலன் (11.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். பரணி: அலைச்சல் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சங்கடங்களை சந்திப்பீர். கார்த்திகை 1: இயந்திரப்பணியாளர், வாகனம் இயக்குவோர் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: வரவேண்டிய பணம் வரும். இரவுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. ரோகிணி: போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2: இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நினைப்பது நடந்தேறும் நாள். வியாபார போட்டியாளர் விலகிச்செல்வர். திருவாதிரை: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும். புனர்பூசம் 1,2,3: தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும். பூசம்: திட்டமிட்டு செயல்படுவீர். பழைய விவகாரங்கள் முடிவிற்கு வரும். ஆயில்யம்: செல்வாக்கு உயரும். உறவினர் உதவியால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

சிம்மம்

மகம்: வருமானத்தால் வளம் காணும் நாள். சிலர் பைரவர் வழிபாட்டில் பங்கேற்பீர். பூரம்: முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். பேச்சில் நிதானம் காப்பது நன்மையாகும். உத்திரம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரிசெய்வீர். வருவாய் அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். எதிர்பார்த்த தகவல் வரும். அஸ்தம்: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். சித்திரை 1,2: தொழிலில் கவனம் அதிகரிக்கும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்

சித்திரை 3,4: திட்டமிட்ட வேலை நடந்தேறும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். சுவாதி: தேவையான வருமானம் வரும். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும். விசாகம் 1,2,3: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். பழைய கடன்களை அடைப்பீர்.

விருச்சிகம்

விசாகம் 4: கடினமான வேலையையும் எளிதாக செய்து முடிப்பீர். உங்கள் நிலை உயரும். அனுஷம்: குழப்பங்கள் நீங்கி தெளிவடைவீர். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். கேட்டை: நிலுவையில் இருந்த வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். 

தனுசு

மூலம்: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். பணியிடத்தில் பாராட்டிற்கு ஆளாவீர். பூராடம்: வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். பண விவகாரத்தில் நெருக்கடியை சந்திப்பீர். உத்திராடம் 1: வியாபார பிரச்னைக்கு தீர்வு காண்பீர். வருமானம் திருப்தி தரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருவோணம்: திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். வெளியூர் பயணத்தில் நிதானம் அவசியம். அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாள்வீர். லாபம் கூடும். சதயம்: இன்று குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது அவசியம். பூரட்டாதி 1,2,3: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

மீனம்

பூரட்டாதி 4: நினைத்ததை சாதிக்கும் நாள். பணியாளர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உத்திரட்டாதி: குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். புதிய முயற்சிகளை இன்று தவிர்க்கவும். ரேவதி: பெரியோரின் ஆதரவு கிடைக்கும். அவசர வேலைகளை முடிந்த வரை தவிர்க்கவும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!