இன்றைய ராசிபலன் (12.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
மேஷம்
அசுவினி: நினைப்பதை நடத்தி முடிக்கும் நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். பரணி: பண விவகாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கார்த்திகை 1: பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணம் நன்மை தரும்.
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகள் வேண்டாம். ரோகிணி: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். தேவையற்ற பிரச்னை தேடிவரும். மிருகசீரிடம் 1,2: போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர். பிறரை அனுசரித்துச் செல்லுங்கள்.
மிதுனம்
மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். தடைகளைத் தாண்டி வெற்றி அடைவீர். திருவாதிரை: வருவாய் அதிகரிக்கும். வியாபார சூட்சுமங்கள் புலப்படும். புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். ஆரோக்யம் சீராகும்.
கடகம்
புனர்பூசம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். ஆறாமிட சந்திரனால் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். பூசம்: உடல்நிலையில் தோன்றிய பாதிப்பு விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் அகலும். ஆயில்யம்: வருமானம் கூடும். எதிர்பார்த்த தகவல் வரும். செல்வாக்கு வெளிப்படும்.
சிம்மம்
மகம்: நம்பிக்கை அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பூரம்: உறவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம். உத்திரம் 1: பூர்வீக சொத்து பிரச்னையை பேசித்தீர்ப்பீர். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும்.
கன்னி
உத்திரம் 2,3,4: வேலைப்பளு அதிகரிக்கும் நாள். இன்று கவனமாக செயல்படுவது அவசியம். அஸ்தம்: எடுத்த வேலையை முடிப்பீர். புதிய நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம். சித்திரை 1,2: திடீர் பயணம் ஏற்பட்டு அலைச்சலை ஏற்படுத்தும். உடலும் மனமும் சோர்வடையும்.
துலாம்
சித்திரை 3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். கையில் பணம் புரளும். சுவாதி: சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். எதிர்பார்த்த லாபம் வரும். விசாகம் 1,2,3: பிறரால் செய்ய முடியாத வேலைகளை செய்து முடிப்பீர்கள்.
விருச்சிகம்
விசாகம் 4: வாழ்க்கைத்துணையின் ஆதரவால் உங்கள் வேலைகள் முடியும். அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பழைய கடனை அடைப்பீர்கள். கேட்டை: கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். உங்கள் செல்வாக்கு வெளிப்படும்.
தனுசு
மூலம்: உங்கள் சொந்த பிரச்னைகளை இன்று மற்றவரிடம் கொண்டு செல்ல வேண்டாம். பூராடம்: உங்களுக்குள் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். நிதானம் காப்பது நன்மையாகும். உத்திராடம் 1: வெளியூர் பயணமும், புதிய முயற்சிகளும் இன்று வேண்டாம்.
மகரம்
உத்திராடம் 2,3,4: சங்கடங்களை சந்திக்கும் நாள். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். திருவோணம்: மனம் குழப்பம் அடையும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். அவிட்டம் 1,2: எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம். வரவு செலவில் கவனம் தேவை.
கும்பம்
அவிட்டம் 3,4: ஆதாயமான நாள். வரவேண்டிய பணம் வரும். கடன்களை அடைப்பீர். சதயம்: தொழிலை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பூரட்டாதி 1,2,3: நண்பர்கள் உதவியால் வேலைகள் நடந்தேறும். உங்கள் செல்வாக்கு உயரும்.
மீனம்
பூரட்டாதி 4: சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர் பயணம் ஏற்படும். உத்திரட்டாதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்ப நெருக்கடி நீங்கும். ரேவதி: உங்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.
(வீடியோ இங்கே )