இன்றைய ராசிபலன் (13.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #L4
Prasu
2 hours ago
இன்றைய ராசிபலன் (13.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பரணி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தெய்வ வழிபாடு நன்மை தரும். கார்த்திகை 1: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். முயற்சி வெற்றியாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வேலையில் கவனம் சிதறும். ரோகிணி: வரவில் இழுபறி ஏற்படும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். மிருகசீரிடம் 1,2: பணியிடத்தில் சிறு பிரச்னை உண்டாகும். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். நண்பர்கள் ஒத்துழைப்பால் திட்டமிட்ட வேலை நடந்தேறும். திருவாதிரை: வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும். நினைத்ததை முடிப்பீர். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடத்தை சரிசெய்வீர். எதிர்பார்த்த வரவு வரும்.

கடகம்

புனர்பூசம் 4: செல்வாக்கு உயரும் நாள். வழக்கு விவகாரம் சாதகமாகும். பூசம்: உடல்நிலை சீராகும். மனதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தொழில் போட்டியாளர் விலகுவர். ஆயில்யம்: திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.

சிம்மம்

மகம்: உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். எடுக்கும் வேலைகளில் லாபம் உண்டாகும். பூரம்: பூர்வீக சொத்து பிரச்னையில் முடிவு வரும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர். உத்திரம் 1: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உறவினர்கள் வீடு தேடி வருவர்.

கன்னி

உத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும். அஸ்தம்: அலைச்சல் அதிகரித்தாலும் உழைப்பிற்கேற்ற வருவாய் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். சித்திரை 1,2: வரவால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும்.

துலாம்

சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். பிறரால் செய்ய முடியாத வேலைகளைச் செய்வீர். சுவாதி: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்னைக்கு இன்று முடிவு கிடைக்கும். விசாகம் 1,2,3: வேலைப்பார்க்கும் இடத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். நட்பு வட்டம் விரிவடையும்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். அனுஷம்: பயணத்தில் சில சங்கடத்தை சந்திப்பீர். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள். கேட்டை: உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். வார்த்தைகளில் கவனம் தேவை.

தனுசு

மூலம்: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். வாகனப் பயணத்தில் கவனம் தேவை. பூராடம்: மனதில் குழப்பம் இருந்தாலும் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர். உத்திராடம் 1: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எந்த ஒன்றிலும் நிதானம் அவசியம்.

மகரம்

உத்திராடம் 2,3,4: நெருக்கடியான நாள். கேட்ட இடத்தில் இருந்து உதவி கிடைக்க தாமதமாகும். திருவோணம்: பண விவகாரத்தில் கவனம் தேவை. முயற்சி இழுபறியாகும். அவிட்டம் 1,2: வாழ்க்கைத்துணையின் ஆதரவால் உங்கள் வேலைகளை நடத்தி முடிப்பீர்.

கும்பம்

அவிட்டம் 3,4: தொழிலில் வருவாய் அதிகரிக்கும். சிலர் புதிய இடம் வாங்குவீர். சதயம்: நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்னை தீரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பூரட்டாதி 1,2,3: எடுத்த வேலையில் வெற்றி உண்டாகும். நிதிநிலை உயரும்.

மீனம்

பூரட்டாதி 4: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உத்திரட்டாதி: பெரியோரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்திற்காக நவீன பொருட்கள் வாங்குவீர். ரேவதி: எதிர்பார்த்த பணம் வரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!