இன்றைய ராசிபலன் (15.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
மேஷம்
அசுவினி: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். கார்த்திகை 1: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: கோயில் வழிபாட்டால் நன்மை உண்டாகும் நாள். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். ரோகிணி: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும். மிருகசீரிடம் 1,2: வேலைப்பளு ஏற்பட்டாலும் அதற்கேற்ற ஆதாயம் வரும். விருப்பம் பூர்த்தியாகும்.
மிதுனம்
மிருகசீரிடம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மையாகும். திருவாதிரை: மனம் குழப்பத்தில் மூழ்கும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். புனர்பூசம் 1,2,3: தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். அமைதி காப்பது நன்மையாகும்.
கடகம்
புனர்பூசம் 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பூசம்: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆயில்யம்: நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். பணத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
சிம்மம்
மகம்: எதிர்ப்பு விலகும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். பூரம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் இருந்த இடம் தெரியாமல் போகும். நினைத்ததை அடைவீர். உத்திரம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். பகைவரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
கன்னி
உத்திரம் 2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வெளியூர் பயணம் நன்மை தரும். அஸ்தம்: பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம். உறவினரால் வேலைகள் நடந்தேறும். சித்திரை 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவதால் எடுத்த வேலைகளில் வெற்றி உண்டாகும்.
துலாம்
சித்திரை 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். எதிர்பார்ப்பு நிறைவேறும். சுவாதி: பிறரின் பலம், பலவீனம் அறிந்து செயல்படுவீர்கள். சிலருக்கு வெளியூர் பயணம் உண்டாகும். விசாகம் 1,2,3: தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்.
விருச்சிகம்
விசாகம் 4: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். அனுஷம்: சகோதரர் ஒத்துழைப்பால் உங்களது வேலை நடந்தேறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கேட்டை: மனதில் தெளிவு உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
தனுசு
மூலம்: வரவால் வளம் காணும் நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். பூராடம்: உங்கள் செயலில் சாதகமான நிலை ஏற்படும். பொருளாதார நிலை உயரும். உத்திராடம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வருமானம் உயரும்.
மகரம்
உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். திருவோணம்: வெளிநபர்களால் சங்கடங்களை சந்திக்க வேண்டிவரும். அமைதி காப்பது அவசியம். அவிட்டம் 1,2: வேலையில் கவனம் செலுத்துங்கள். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
கும்பம்
அவிட்டம் 3,4: வியாபாரம் முன்னேற்றம் அடையும். திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர். சதயம்: எதிர்பாராத செலவுகள் தோன்றும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். பூரட்டாதி 1,2,3: இழுபறியாக இருந்த வேலையை இன்று போராடி முடிப்பீர்கள்.
மீனம்
பூரட்டாதி 4: நன்மையான நாள். பணவரவில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
உத்திரட்டாதி: எடுக்கும் வேலையில் லாபம் உண்டாகும். உறவினர்கள் வீடு தேடி வருவர்.
ரேவதி: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உண்டாகும்.
(வீடியோ இங்கே )