எரிபொருள் QR குறியீடுகளைத் திருடும் கும்பல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

#SriLanka #Warning #Public #QRcode #stealing #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 hours ago
எரிபொருள் QR குறியீடுகளைத் திருடும் கும்பல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

எரிபொருள் விநியோகத்திற்காக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கியூ.ஆர். குறியீட்டு முறையைப் பயன்படுத்தி சில மோசடிக் கும்பல்கள் பொதுமக்களை ஏமாற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பெயரில் போலியாக உருவாக்கப்பட்ட இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகள் மூலம் பொதுமக்களின் வாகனத் தரவுகள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றன.

உங்களின் தகவல்களைப் பயன்படுத்தி மோசடிக்காரர்கள் தமக்கான கியூ.ஆர். குறியீடுகளை உருவாக்கி விடுகின்றனர்.

இதனால் உண்மையான உரிமையாளர்களுக்குத் தமது வாகனத்தைப் பதிவு செய்யவோ அல்லது கியூ.ஆர். குறியீட்டைப் பெறவோ முடியாமல் போகிறது.

பொதுமக்கள் எரிபொருள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ள fuelpass.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வேறு எந்தவொரு நபருக்கோ அல்லது இணையதளத்திற்கோ தகவல்களை வழங்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எரிபொருள் விநியோகத்தை சீராக்கவும், தொழில்நுட்ப ரீதியாக ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கவும் அரசாங்கம் தற்போது தீவிரமாகச் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!