இன்றைய ராசிபலன் (20.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #L4
Prasu
1 hour ago
இன்றைய ராசிபலன் (20.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பரணி: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். மனதில் நிம்மதி உண்டாகும். தம்பதிக்குள் சச்சரவு ஏற்படும். கார்த்திகை 1: நடக்காது என நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். தொலைந்து போன பொருள் கிடைக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: எதிர்ப்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். ரோகிணி: திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். குடும்ப நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும். மிருகசீரிடம் 1,2: போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளித்து வெற்றி பெறுவீர். வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். தொழிலில் புதிய உத்திகளைக் கையாள்வீர். திருவாதிரை: வேலைப் பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். தேவைக்கேற்ற பணம் வரும். புனர்பூசம் 1,2,3: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர்.

கடகம்

புனர்பூசம் 4: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செய்து வரும் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர். பூசம்: நினைப்பது நிறைவேறும். வருமானத்திற்காக திட்டமிட்டு செயல்படுவீர். திறமை வெளிப்படும் நாள். ஆயில்யம்: மனக்குழப்பம் விலகும். பெரியோர்கள் உதவியால் நின்று போன வேலை நடக்கும். வருமானம் உயரும்.

சிம்மம்

மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலைகளை திட்டமிட்டு செய்வது அவசியம். பூரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் ஒருவித பயம் தோன்றும். எதிர்பார்ப்பில் தடை உண்டாகும். உத்திரம் 1: புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது அவசியம். பிறரை அனுசரித்துச் செல்வதால் சங்கடம் இல்லாமல் போகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: ஆதாயமான நாள். நண்பர்கள் ஒத்துழைப்புடன் வேலையை நடத்தி லாபம் அடைவீர். அஸ்தம்: கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். சித்திரை 1,2: நண்பர்கள் ஒத்துழைப்பால் இழுபறியாக இருந்த வேலை முடியும். முயற்சி எளிதாக வெற்றி பெறும்.

துலாம்

சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். செயல்களில் வெற்றி பெறுவீர். உடல் நிலை சீராகும். போட்டியாளர் விலகிச் செல்வர். சுவாதி: கவனக் குறைவால் சில சங்கடம் தோன்றும். கையில் எடுக்கும் வேலைகளில் முழுமையான அக்கறை தேவை. விசாகம் 1,2,3: திறமை வெளிப்படும். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்.

விருச்சிகம்

விசாகம் 4: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த தகவல் வரும். வருவாய் அதிகரிக்கும். அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உழைப்பாளர்களுக்கு பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உண்டாகும். கேட்டை: நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் தடைகளும் தாமதமும் ஏற்படும். குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குவீர்.

தனுசு

மூலம்: உழைப்பால் உயர்வு காணும் நாள். மனச் சங்கடம் நீங்கும். உழைப்பிற்கேற்ற லாபம் உண்டாகும். எடுத்த வேலை முடியும். பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். உத்திராடம் 1: நீங்கள் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சிறு வியாபாரிகளுக்கு வருமானம் திருப்தி தரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கையில் பணம் புரளும். திருவோணம்: முயற்சி வெற்றியாகும். உடன் வேலைப் பார்ப்பவர்கள் ஆதரவாக இருப்பர். தடைபட்ட வேலை நடக்கும். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். எண்ணம் நிறைவேறும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: விருப்பம் நிறைவேறும் நாள். கடனாக கொடுத்த பணம் திரும்ப வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். சதயம்: வேலைப் பார்க்கும் இடத்தில் கவனமாக செயல்படுவது அவசியம். வார்த்தைகளில் நிதானம் தேவை. பூரட்டாதி 1,2,3: புதிய வேலைகளில் ஈடுபடும் முன் யோசித்து திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

மீனம்

பூரட்டாதி 4: மகிழ்ச்சியற்ற நாள். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்திரட்டாதி: இழுபறியாக இருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ரேவதி: வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும். மனக்குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். பயணத்தில் எச்சரிக்கை தேவை.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!