நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு அரசே பொறுப்பு - எம்.பி ரவிகரன் சுட்டிக்காட்டு

#SriLanka #government #Country #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
1 hour ago
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு அரசே பொறுப்பு - எம்.பி ரவிகரன் சுட்டிக்காட்டு

அரசாங்கம் எரிபொருளுக்கான சடுதியான கேள்வி அதிகரிப்பைக் கட்டுப்படுத்த தவறியதன் மூலம் நிகழ்ந்த எரிபொருள் பதுக்கல்களாலேயே, தற்போது நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்போது நாட்டிலுள்ள எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதற்காக புதன்கிழமை அன்று அரச விடுமுறை அறிவிக்கப்பட்டமை குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகளாவிய பொது நெருக்கடி நிலைக்கு, கொள்கை நிலையிலான திடமான முடிவை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கின்ற போது நிகழ்வுகளுக்கான எதிர்வினையை மட்டுமே தான் அடுக்கடுக்காக ஆற்றுகின்றதோ என்றே என தோன்றுகிறது என தெரிவித்துள்ளார்.

முடிவெடுப்பதில் அடிக்கடி ஏற்படும் இத்தகையை மாற்றங்கள், ஒரு முறையான நீண்டகாலத் திட்டம் அரசிடம் இல்லையோ என எண்ணத் தோன்றுகிறது.

பற்றாக்குறையை முன்கூட்டியே கணித்து கட்டமைக்கப்பட்ட தீர்வுகளை தயாரிப்பதற்கு பதிலாக, அரசாங்கம் ஒரு தற்காலிக நடவடிக்கையிலிருந்து மற்றொன்றுக்கு மாறிக்கொண்டிருப்பதாகவே எமக்கு புலப்படுகிறது.

எரிபொருளுக்கான நெடுவரிசைகளும் பதுக்கல்களும் கடந்த மாதத்தின் கடைசி நாளிலேயே தொடங்கிவிட்டது. இரண்டு கிழமைகள் கடந்தே QR முறைமை கொண்டுவரப்படுகிறது.

 ஒன்றரை மாதத்திற்குரிய எரிபொருள் முதல் 10 நாள்களுக்குள் தீர்ந்துவிட்டதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கிறது.

 இவ்வாறான கேள்விகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அரசாங்கம் என தெரிவித்துள்ளார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!