ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானங்கள்!

#world_news #Iran #Drone #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAPOOJA #L4 #airspace
Abi
3 hours ago
ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானங்கள்!

ஈரானுக்கு எதிரான தற்போதைய போரின் போது, இஸ்ரேலுக்குச் சொந்தமான 20 வரையான ஆளில்லாப் போர் வானூர்திகள் (Drones) சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானிய வான்பரப்பில் பறப்பில் ஈடுபட்டிருந்த போதே இவை சுட்டு வீழ்த்தப்பட்டதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த அளவிலான ஆளில்லா விமான இழப்புகள் தமக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியவை என இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளதாக 'டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல்' (Times of Israel) செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலின் போர் வானூர்திகள் எதுவும் இதுவரை வீழ்த்தப்படவில்லை என்றும், இருப்பினும் தமது விமானிகள் தொடர்ந்து வானூர்தி எதிர்ப்பு ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஒரு சந்தர்ப்பத்தில் இஸ்ரேலிய விமானி ஒருவர் ஏவுகணைத் தாக்குதலுக்கு மிக நெருக்கமாகச் சென்று நூலிழையில் தப்பியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!