"சைவ சித்தாந்தத்தில் கலாநிதிப் பட்டம்: யாழ்ப்பாணத்தில் தருமபுர ஆதீன ஆராய்ச்சி நிறுவனம் தொடக்கம்."
யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையினர், இந்தியா தருமை ஆதீன சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தினரின், சைவ சித்தாந்த பட்டப்படிப்பு, கலாநிதி பட்டப்படிப்பினை யாழ்ப்பாணத்தில் ஆரம்பம் செய்கிறார்கள்.
எதிர்வரும் 05.04.2026 மாலை யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையில் நாவலர் மண்டபத்தில் ஆரம்பித்து வைப்பதற்கு இந்தியா தருமை ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வருகை தர உள்ளார்கள்.
அச்சமயம் பயிற்சி வகுப்புகளில் இணைய உள்ளவர்கள் உள்ளிட்ட அனைவரும் வருகை தந்து சுவாமி அவர்களின் ஆசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றார்கள்.
தருமை ஆதீனத்தினர் திருமறையையும் திருமுறையினையும் ஒரு சேர போற்றி சிறப்பு வழங்குவது மிகவும் வரவேற்கத்தக்கது. போற்றத்தக்கது.
எமது ஈழவள திரு நாட்டிற்கு ஆதீன முதல்வர்கள், சன்னிதானங்கள், அந்தண உத்தமர்கள் விப்ரசிரேஷ்டர்கள் வருகை புரிவது திருவருளும் குருவருளும் ஒருசேர கிடைத்த பாக்கியமே.
இப்பயிற்சி நெறிக்கான ஈழத்து இணைப்பாளராக திருமதி. சிவப்பிரியா அவர்கள் தருமையாதீன குருமணிகளினால் பெயர்குறிப்பிடப்பட்டுள்ளார்.
ஆர்வமும் ஊக்கமும் உள்ளவர்கள் தொடர்பு கொண்டு விபரங்கள் பெற்று இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறார்கள்
"சிவாகமகலாநிதி" கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள்.
தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.
ஸ்தாபகர், அச்சுவேலி "சிவாகமஞானபானு "சிவஸ்ரீ. ச. குமாரசாமி குருக்கள் அவர்களின் நினைவு அறக்கட்டளை.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்