டிரம்பின் உத்தரவால் கச்சா எண்ணெய் விலை சரிவு

#America #Oil #Iran #ceasefire #L4 #DonaldTrump
Prasu
5 hours ago
டிரம்பின் உத்தரவால் கச்சா எண்ணெய் விலை சரிவு

அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28ம் திகதி ஈரான் நாட்டை கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் வலைதள பதிவில் இன்று வெளியிட்ட செய்தியில், அமெரிக்காவும் ஈரானும் கடந்த 2 நாட்களாக மிக நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ முறையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. 

மத்திய கிழக்கில் நம்முடைய பகைமைக்கு முற்றிலுமொரு தீர்வு காணப்பட உள்ளது. இதனால், ஈரான் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் அனைத்து ராணுவ தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று போர் துறைக்கு நான் உத்தரவிட்டு உள்ளேன் என தெரிவித்திருந்தார்.

டிரம்பின் இந்த அறிவிப்பால் கச்சா எண்ணெய்யின் விலை 13 சதவீதத்திற்கும் கூடுதலாக சரிவடைந்து உள்ளது. 

இதில், பிரென்ட் கச்சா எண்ணெய், 17 அமெரிக்க டாலர் அல்லது 15 சதவீதம் என்ற அளவில் விலை குறைந்து, ஒரு பீப்பாய் 96 டாலர் என்ற அளவுக்கு விற்பனையாகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!