இன்றைய ராசிபலன் (24.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #L4
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (24.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: விருப்பம் பூர்த்தியாகும் நாள். நினைத்ததை நடத்தி முடிப்பீர். திட்டமிட்டு செயல்படுவதால் வேலை நடந்தேறும். பரணி: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர் அதிகரிப்பர். லாபம் திருப்தி தரும். கார்த்திகை 1: இழுபறியாக இருந்த வேலை முடியும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர். முயற்சி பலிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். மனக்குழப்பம் விலகும். செயல்களில் தெளிவு ஏற்படும். எண்ணம் நிறைவேறும். ரோகிணி: நிதானமாக செயல்படுவதால் வேலை நடக்கும். புதிய முயற்சிகளில் கவனம் செலுத்துவது நல்லது. மிருகசீரிடம் 1,2: வருமானத் தடை விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். செல்வாக்கு பெருகும். வெளியூர் பயணம் லாபம் தரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நினைப்பது நிறைவேறும். செலவு அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். திருவாதிரை: வரவு செலவில் கவனம் தேவை. எதிர்பாராத செலவு தோன்றும். அலைச்சல் அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: உங்கள் விருப்பம் நிறைவேறும். நண்பர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தொலைந்து போன பொருள் கிடைக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: பெரியோர் ஆதரவால் செல்வாக்கு உயரும். செயல்களில் லாபம் காண்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சிஅதிகரிக்கும். பூசம்: திட்டமிட்ட வேலைகளை நடத்தி லாபம் காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். ஆயில்யம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு முயற்சிகளை வெற்றியாக்கும்.

சிம்மம்

மகம்: கவனமுடன் செயல்படுவதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபார நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். பூரம்: செல்வாக்கு உயரும். நேற்றைய முயற்சி நிறைவேறும். விஐபிகளை சந்திப்பீர். வருமானம் திருப்தி தரும். உத்திரம் 1: வியாபாரத்தை விரிவு செய்ய திட்டம் தீட்டுவீர். வாடிக்கையாளர் அதிகரிப்பர். செல்வாக்கு உயரும் நாள்.

கன்னி

உத்திரம் 2,3,4: நன்மையான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். அஸ்தம்: உழைப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலையை நடத்தி முடிப்பீர். தந்தைவழி உறவினர் ஆதரவு கிடைக்கும். சித்திரை 1,2: பெரியோர் ஆதரவால் வேலைகளை நடத்தி முடித்து லாபம் காண்பீர். வருமானம் திருப்தி தரும்.

துலாம்

சித்திரை 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் விலகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. சுவாதி: நீங்கள் அமைதியாக இருந்தாலும் பிரச்னை உங்களைத் தேடிவரும். செயல்களில் நிதானம் அவசியம். விசாகம் 1,2,3: வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்லுவீர்கள். சந்திராஷ்டமம் தொடர்வதால் வாக்கு வாதம் வேண்டாம்.

விருச்சிகம்

விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்ப்பு நிறைவேறும். நண்பர்கள் உதவியுடன் எடுக்கும் முயற்சி லாபமாகும். அனுஷம்: நீங்கள் நினைத்ததை நடத்தி முடிப்பீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும். கேட்டை: வரவேண்டிய பணம் வரும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

தனுசு

மூலம்: முன்னேற்றமான நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர். பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். உங்களுக்கு தொல்லை கொடுத்தவர் விலகுவர். தெய்வ வழிபாடு நன்மை தரும். உத்திராடம் 1: நீங்கள் எண்ணியது நிறைவேறும். விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்து முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் இருக்கும். கவனம் சிதறும். திருவோணம்: வேலைகளில் சிறு தடை ஏற்படும். போராடி வெற்றி பெறுவீர். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பீர். அவிட்டம் 1,2: வரவு செலவில் ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தினர் உதவியால் நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்.

கும்பம்

அவிட்டம் 3,4: லாபமான நாள். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். குடும்ப நெருக்கடி நீங்கும். சதயம்: தடைகளைத் தாண்டி உங்கள் வேலைகளை நடத்தி லாபம் காண்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: வேலைபளு அதிகரிக்கும். வேலை எளிதாக நடக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்.

மீனம்

பூரட்டாதி 4: முயற்சி வெற்றியாகும் நாள். செய்து வரும் தொழிலில் லாபம் கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உத்திரட்டாதி: இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். வரவேண்டிய பணம் வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர். உங்கள் செல்வாக்கு உயரும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!