இன்றைய ராசிபலன் (25.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #L4
Prasu
2 hours ago
இன்றைய ராசிபலன் (25.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: வரவால் வளம் காணும் நாள். எடுக்கும் வேலை வெற்றியாகும். வியாபாரத்தில் விருப்பம் நிறைவேறும். பரணி: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். பண நெருக்கடி நீங்கும். முயற்சிக்கேற்ற வருமானம் வரும். கார்த்திகை 1: மனதில் நிம்மதி ஏற்படும். சகோதரர்கள் வேலைகளுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். வெளியூர் பயணம் நன்மை தரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: குழப்பம் விலகும் நாள். மனத்தெளிவு பிறக்கும். எடுக்கும் வேலைகளில் வெற்றி உண்டாகும். ரோகிணி: தேவைகளை நிறை வேற்றிக்கொள்ள புதிய வழிமுறைகளைக் கையாள்வீர். வெளியூர் பயணம் லாபம் தரும். மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மனக் குழப்பம் உண்டாகும். திருவாதிரை: பண வரவில் இருந்த தடை நீங்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். புனர்பூசம் 1,2,3: நேற்றைய பிரச்னை மீண்டும் தலை எடுக்கும். எதிர்ப்பு வலுக்கும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.

கடகம்

புனர்பூசம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சி இழுபறியாகும். செலவு அதிகரிக்கும். பூசம்: வேலை பளுவிற்கு ஆளாவீர். உழைப்பால் மதிப்பு அதிகரிக்கும். விஐபிகள் ஆதரவால் முயற்சிகள் வெற்றியாகும். ஆயில்யம்: வியாபாரத்தில் போட்டிகளை சந்திப்பீர். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். வரவை விட செலவு அதிகரிக்கும்.

சிம்மம்

மகம்: மகிழ்ச்சியான நாள். உங்கள் அணுகுமுறையால் வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நிதி நிலை உயரும். பூரம்: எதிர்பார்த்த வரவு வரும். எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். சிறு வியாபாரிக்கும் பணம் புரளும். உத்திரம் 1: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: அனுகூலமான நாள். திட்டமிட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் வரும். அஸ்தம்: நீங்கள் ஈடுபடும் வேலையில் சில தடை உண்டாகும். முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். சித்திரை 1,2: மனக்குழப்பம் நீங்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும்.

துலாம்

சித்திரை 3,4: யோகமான நாள். விருப்பம் பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். சுவாதி: பெரிய மனிதர்களை சந்திப்பீர். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3: தடைகளைத் தாண்டி வெற்றிபெறுவீர். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும்.

விருச்சிகம்

விசாகம் 4: நெருக்கடியான நாள். காலையில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். அனுஷம்: அடுத்தவர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிவரும். பிறரிடம் வாக்கு வாதத்தை தவிர்க்கவும். கேட்டை: தேவையற்ற பிரச்னை தேடி வரும். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். நிதானம் அவசியம்.

தனுசு

மூலம்: செல்வாக்கு உயரும் நாள். இழுபறியாக இருந்த வேலை முடியும். எதிர்ப்பு விலகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். பூராடம்: எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். நண்பர்கள் பாராட்டிற்கு ஆளாவீர். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர். உத்திராடம் 1: நேற்று நடைபெறாமல் இழுபறியாக இருந்த வேலை இன்று நடக்கும். வரவு அதிகரிக்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: எதிர்ப்புகளை வெல்லும் நாள். உங்கள் உழைப்பால் லாபம் காண்பீர். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். திருவோணம்: நேற்றைய பிரச்னை முடியும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வியாபாரம் லாபமாகும். அவிட்டம் 1,2: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். உங்கள் செயல்களில் எதிர்பாராத சங்கடங்களை சந்திப்பீர். பிள்ளைகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். சதயம்: வியாபாரத்தில் வாடிக்கையாளரை அனுசரித்துச்செல்வது நல்லது. சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டு செயல்பட்டாலும் நீங்கள் எடுக்கும் வேலை இழுபறியாகும். யோசித்து செயல்படுவது நல்லது.

மீனம்

பூரட்டாதி 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வேலை பளுவால் நெருக்கடிக்கு ஆளாவீர். அலைச்சல் அதிகரிக்கும். உத்திரட்டாதி: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். மனம் சோர்வடையும். உடன் பணிபுரிபவர்கள் எரிச்சல் படுத்துவர். ரேவதி: வியாபாரத்தில் முழு கவனம் தேவை. உங்கள் வேலைகளை நீங்களே செய்வது நல்லது. பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!