இன்றைய ராசிபலன் (26.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #L4
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (26.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். எடுக்கும் வேலைகளில் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். பரணி: கனவு நனவாகும் நாள். வரவினால் சங்கடம் விலகும். நினைத்த வேலை நடக்கும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். கார்த்திகை 1: வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர். எதிர்பார்த்த வருமானம் வரும். பணிபுரியும் இடத்தில் திறமை வெளிப்படும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: வரவால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். குடும்ப நெருக்கடி நீங்கும். ரோகிணி: நினைப்பது நிறைவேறும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை சரியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நெருக்கடி விலகும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் வழங்க வேண்டாம்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். திருவாதிரை: செயல்களில் சில தடை தோன்றும். முயற்சி இழுபறியாகும். மனம் குழப்பம் அடையும். புனர்பூசம் 1,2,3: நேற்றைய பிரச்னை முடியும். திட்டமிட்ட வேலை நடக்கும். உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது.

கடகம்

புனர்பூசம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத செலவு தோன்றும். அலைச்சல் உண்டாகும். நினைத்ததை சாதிப்பீர். பூசம்: பணிபுரியும் இடத்தில் எதிர்ப்பு அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளில் பணம் கரையும். குடும்பத்தில் நெருக்கடி உண்டாகும். ஆயில்யம்: திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் வரும் லாபத்தை விட செலவு கூடும். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவிபுரிவர்.

சிம்மம்

மகம்: விழிப்புடன் செயல்பட்டு வெற்றி அடையும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் முயற்சி சாதகமாகும். பூரம்: உங்கள் வேலை நடக்கும். விருந்தினர் வீடுதேடி வருவர். நண்பர்களால் லாபம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். உத்திரம் 1: தடைபட்ட வேலை நடக்கும். முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். பெரியோர் ஆதரவால் எண்ணம் நிறைவேறும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வியாபாரம் குறித்த சிந்தனை மேலோங்கும் நாள். வருமானத் தடை விலகும். ஒருசிலர் பயணம் மேற்கொள்வீர். அஸ்தம்: தொழில் விருத்தியாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பநெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சித்திரை 1,2: பணிபுரியும் இடத்தில் திறமை வெளிப்படும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்த்த வருவாய் வரும். புதிய முயற்சி வேண்டாம்.

துலாம்

சித்திரை 3,4: நன்மையான நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு உயரும். சுவாதி: நிதானமாக செயல்பட்டு வேலைகளை முடிப்பீர். தந்தை வழி உறவுகள் ஆதரவால் இழுபறியாகும். விசாகம் 1,2,3: பெரியோர் ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிரி விலகிச்செல்வர்.

விருச்சிகம்

விசாகம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். மனம் குழப்பம் அடையும். அனுஷம்: சந்திராஷ்டமம் என்பதால் நெருக்கடி அதிகரிக்கும். பிரச்னை தேடிவரும். உறவுகளுடன் மோதல் உண்டாகும். கேட்டை: வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காதீர். வேலையில் மட்டும் கவனம் தேவை. புதிய முயற்சி இன்று வேண்டாம்.

தனுசு

மூலம்: நண்பர்கள் உதவியால் நன்மை உண்டாகும் நாள். கவனமாக செயல்படுவதால் நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். பூராடம்: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வருமானம் திருப்தி தரும். உத்திராடம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் நாள். நினைத்ததை நடத்தி முடிப்பீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். மறைமுகத் தொல்லை நீங்கும். திருவோணம்: நேற்று முடியாமல் இருந்த வேலை முடியும். எதிரி விலகிச் செல்வர். வருமானம் உயரும். உடல்நிலை சீராகும். அவிட்டம் 1,2: செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த பிரச்னைகளைப் பேசித்தீர்ப்பீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் நாள். உங்கள் வேலைகளில் இருந்த தடை விலகும். சதயம்: திட்டமிட்டு செயல்படுவதால் வேலை நடக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: செய்து வரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.

மீனம்

பூரட்டாதி 4: வேலைபளு அதிகரிக்கும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பண நெருக்கடி விலகும். உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் வேலை பளு அதிகரிக்கும். மனதில் குழப்பமும் பதட்டமும் உண்டாகும். ரேவதி: நீங்கள் மேற்கொள்ளும் வேலை வெற்றியடையும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதிய முயற்சி வேண்டாம்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!