ராகுல் காந்தியின் கேரள பிரச்சார பயணம் ரத்து

#India #Election #Kerala #Rahul_Gandhi #Politics #L4
Prasu
3 months ago
ராகுல் காந்தியின் கேரள பிரச்சார பயணம் ரத்து

சோனியா காந்தியின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரள மாநிலத்தில் மேற்கொள்ள இருந்த தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி ரத்து செய்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி, உடல்நிலை பாதிப்பு காரணமாக புதுடெல்லியில் உள்ள சர் கங்காராம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதை சோனியா காந்தி உணர்ந்ததாகவும், அதன் காரணமாக அவர் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

சோனியா காந்தியின் உடல்நிலையில் கவலைக்குரிய தீவிர பாதிப்புகள் ஏதும் இல்லை என்றும், அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த ஜனவரி மாதத்தில் சோனியா காந்தி இதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

அப்போது டெல்லியில் நிலவிய கடும் குளிர் மற்றும் காற்று மாசுபாடு, அவரது உடல்நிலை பாதிக்கப்பட காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4