மீண்டும் முடங்கும் ஆட்பதிவுத்திணைக்களம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

#SriLanka #Department #ImportantNews #Public #closed #Registration Department #ADDA #L4
Lakhi
3 hours ago
மீண்டும் முடங்கும் ஆட்பதிவுத்திணைக்களம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் முறிவு காரணமாக, அதன் அனைத்து பொதுச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று (26) பிற்பகல் 1:30 மணியளவில் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப பிரச்சினைக் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்று (27) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகளும் இயங்காது. இதில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவைகள் ஆகிய இரண்டும் அடங்குகின்றன. எனவே, கொழும்பிலுள்ள தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களுக்கும் வருகை தருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கணினி அமைப்பு முழுமையாக சரி செய்யப்பட்ட பின்னரே சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும். இது குறித்த மேலதிக அறிவிப்புகளை திணைக்களம் பின்னர் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் இதேபோன்ற முடக்கல் நிலை, ஆட்பதிவுத்திணைக்களத்தில் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!