நுவரெலியா லவர்ஸ் லீப்ஸ் நீர்வீழ்ச்சியில் விழுந்து வெளிநாட்டவர் படுகாயம்!

#SriLanka #NuwaraEliya #Lanka4 #Injury #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #foreigners
Abi
2 hours ago
நுவரெலியா லவர்ஸ் லீப்ஸ் நீர்வீழ்ச்சியில் விழுந்து வெளிநாட்டவர் படுகாயம்!

நுவரெலியா, லவர்ஸ் லீப்ஸ் (Lovers Leap) நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்ற வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர், ஆபத்தான முறையில் செல்பி நிழற்படம் எடுக்க முயன்றபோது தவறி வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.

இந்த அனர்த்தம் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ள நிலையில் 52 வயதுடைய வெளிநாட்டுப் பிரஜை ஒருவரே படுகாயமடைந்துள்ளார். தனது மனைவியுடன் நீர்வீழ்ச்சியின் உச்சிப் பகுதிக்குச் சென்ற குறித்த சுற்றுலாப் பயணி, அங்குள்ள மிகவும் அபாயகரமான பாறை ஒன்றின் மீது நின்று செல்பி (Selfie) நிழற்படம் எடுக்க முயற்சித்துள்ளார்.

இதன்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறிய அவர், கீழே வீழ்ந்துள்ளார். விபத்து குறித்து அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலையடுத்து, நுவரெலியா தலைமையக காவல்துறைப் பரிசோதகர் பி.எஸ்.சி. சஞ்சீவவின் வழிகாட்டலில் விசேட மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் காயமடைந்தவரை மீட்டுள்ளனர்.

காயமடைந்த வெளிநாட்டவர் உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த அனர்த்தத்தில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுற்றுலாப் பயணிகள் இவ்வாறான அபாயகரமான பகுதிகளில் நிழற்படம் எடுக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறையினர் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!