234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி - வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்த விஜய்
#India
#Election
#Lanka4
#Vijay
#list
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
இந்தியாவின் தமிழகத்தில் அடுத்த மாதம் 23 ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் ஆரம்பமாகிறது.
இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழகம் எதிர்வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமனு கொடுத்தவர்களிடம் அந்த கட்சி தலைவர் விஜய் நேர்காணல் நடத்தி வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளார்.
அதன் அடிப்படையில் நாளை(28) த.வெ.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தை ஒன்றாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்