நாடு முழுவதும் விசேட பாதுகாப்புத் திட்டம் - பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு.

#SriLanka #Police #Country #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
நாடு முழுவதும் விசேட பாதுகாப்புத் திட்டம் - பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு.

எதிர்வரும் சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர இது குறித்து கருத்து வெளியிடுகையில், புத்தாண்டு காலத்தில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரிப்பதைக் கருத்திற்கொண்டு மேலதிக அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களின் தொடருந்து நிலையங்கள் மற்றும் பிரதான பேருந்து நிலையங்களை மையப்படுத்தி விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

பொருட்கள் கொள்வனவு செய்ய நகரங்களுக்கு வருபவர்கள் மற்றும் கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறை மா அதிபரினால் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 1 முதல் ஆரம்பமாகும் இந்தத் திட்டம், புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்து பொதுமக்கள் மீண்டும் நகரங்களுக்குத் திரும்பும் வரை தொடர்ச்சியாக அமுலில் இருக்கும்.

பிராந்தியங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளின் கீழ் இந்த விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!