இன்றைய ராசிபலன் (29.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4 #L4
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (29.03.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: விருப்பம் பூர்த்தியாகும் நாள். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பரணி: உறவினர் வீடு தேடி வருவர். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர். தாய்வழி உறவினரால் நன்மை உண்டு. கார்த்திகை 1: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரத்தில் பணியாளர் ஒத்துழைப்பு இருக்கும். ரோகிணி: வேலை நெருக்கடியால் அவதிப்பட்டு வந்த நிலை மாறும். உடலில் ஏற்பட்ட சோர்வு விலகும். மிருகசீரிடம் 1,2: திறமை வெளிப்படும். இழுபறியாக இருந்த வேலை முடியும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நெருக்கடி நீங்கும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். திருவாதிரை: வரவேண்டிய பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். புனர்பூசம் 1,2,3: எடுக்கும் முயற்சி பலிக்கும். தடைபட்ட வேலை நடக்கும். அக்கம் பக்கத்தினருடன் ஏற்பட்ட பிரச்னை சரியாகும்.

கடகம்

புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். நேற்றைய பிரச்னை முடியும். வெளியூர் பயணம் லாபம் தரும். விலகிய உறவினர் வீடு தேடி வருவர். பூசம்: மனக்குழப்பம் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும். ஆயில்யம்: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மனம் குழப்பமடையும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.

சிம்மம்

மகம்: இன்று மாலை வரை செலவும் அலைச்சலும் அதிகரிக்கும். செல்வாக்கை நிரூபிப்பதற்காகவே செலவு செய்வீர். பூரம்: சிலருக்கு திடீரென வெளியூர் பயணம் ஏற்படும். ஒய்வெடுக்க நினைத்தாலும் முடியாமல் போகும். உத்திரம் 1: வாழ்க்கைத் துணையின் ஆதரவால் எடுக்கும் வேலையில் வெற்றி உண்டாகும். தொலைந்தது கிடைக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வரவால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். அஸ்தம்: தொழிலில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலமிழப்பர். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சித்திரை 1,2: உங்கள் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். பெரியோர் ஆதரவால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். பணியாளர் ஆதரவு அதிகரிக்கும். வருமானம் உயரும். சுவாதி: திறமையால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விசாகம் 1,2,3: நேற்று இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். வியாபாரத்தை விரிவு செய்வதற்கு முயற்சிப்பீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: பெரியோரை சந்தித்து வாழ்த்து பெறுவீர். சிலர் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வருவீர். முயற்சி பலிக்கும். அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். நண்பர்களால் பிரச்னை முடியும். வருமானம் உயரும். கேட்டை: வருமானத்திற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். பணத்தட்டுப்பாடு விலகும். தந்தையால் வேலை நடக்கும்.

தனுசு

மூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். எடுக்கும் வேலையில் அக்கறையும் தேவை. பூராடம்: அனைத்திலும் நிதானம் தேவை. புதிய முயற்சி இன்று வேண்டாம். தெய்வ வழிபாடு நன்மை தரும். உத்திராடம் 1: திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது. 

மகரம்

உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். இன்று மாலை வரை நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திருவோணம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். அவிட்டம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். நணபர்கள் ஆலோசனை நன்மை தரும். தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர். 

கும்பம் 

அவிட்டம் 3,4: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த பிரச்னை விலகும். போட்டியாளர் விலகுவர். சதயம்: மறைமுக எதிரிகளை கண்டறிவீர். நினைத்ததை நடத்தி முடிப்பீர். தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடியும். பூரட்டாதி 1,2,3: நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். 

மீனம்

பூரட்டாதி 4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்ப்பு இழுபறியாகும். குடும்பத்தினர் புரிந்து கொள்ளாமல் போவர். உத்திரட்டாதி: உடன் இருப்போரால் நெருக்கடி அதிகரிக்கும். நீங்கள் நினைத்ததும் நடப்பதும் வேறாக இருக்கும். ரேவதி: பிள்ளைகளை நினைத்து வருந்துவீர். அவர்களுடைய செயல்பாடு உங்களுக்குப் பிடிக்காமல் போகும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!