இந்த வாரம் யாருக்கு என்ன நடக்கும்? 12 ராசிகளுக்கும் பலன்கள் உள்ளே (வீடியோ இணைப்பு)

#Astrology #Rasipalan #people #Lanka4 #L4
Prasu
2 hours ago
இந்த வாரம் யாருக்கு என்ன நடக்கும்? 12 ராசிகளுக்கும் பலன்கள் உள்ளே (வீடியோ இணைப்பு)

மேஷம்

மேஷ ராசியினருக்கு முனைப்புடன் செயல்பட்டு காரியவெற்றி பெறும் வாரம். ராசிநாதனால் மனதிடம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் நிறைவேறும். 

அபிலாஷைகள் பூர்த்தியாகும் சுபயோகம் உண்டாகும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் சுப காரிய பேச்சு வெற்றிகரமாக முடிவடைந்து மங்கள ஓசை கேட்கும். 

அரசியல் களத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் தேடி வரும். சமூகத்தில் செல்வாக்கு மிக்க நபர்களின் நட்பு கிட்டும். உறவுகளிடையே இருந்த கசப்புணர்வு நீங்கி ஒற்றுமை ஏற்படும்.

தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான சாதகமான சூழல் நிலவுகிறது. 

வணிக ரீதியான பயணங்கள் வெற்றியைத் தரும். பங்குச் சந்தை முதலீடுகளில் நிதானம் தேவை. ரத்த அழுத்தம், தலைவலி தொடர்பான உபாதைகள் ஏற்படலாம். 

அதிகாலை நடை, சிவபெருமானுக்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி வழிபடுவது நலம் தரும். உணவில் உப்பின் அளவைக் குறைத்து, காரமான பண்டங்களைத் தவிர்ப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இது சௌகரியம் பெருகும் வாரம். மனதிற்குப் பிடித்தமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலைத்துறையினருக்குப் புகழும் கௌரவமும் தேடி வரும். 

தடைப்பட்ட அரசு உதவி கிடைக்கும். நீண்ட தூரப் பயணங்கள் பலன் தரும். இல்லற வாழ்வில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அரசியல் பிரமுகர்களுக்குப் செல்வாக்கு உயரும். 

மூக விழாக்களில் தலைமை தாங்கும் வாய்ப்பு கிட்டும். உறவினர்களின் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நண்பர் வீட்டு விருந்து உபசாரங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.

பொருளாதார நிலை சீராக இருக்கும். கடன்கள் வசூலாகும். தொழில் ரீதியாகப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டு வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறையினருக்குப் பொற்காலம். முகம் மற்றும் பற்கள் சம்பந்தமான சிறு உபாதைகள் வரலாம். 

வாய் சுத்தத்தில் கூடுதல் கவனம் செலுத்துவும். துளசி செடிக்கு நெய் தீபமேற்றி வலம் வருவது மங்களம் தரும். வாசனை மிகுந்த மலர்களைக் கொண்டு மகாலட்சுமியை அர்ச்சிப்பது மன இறுக்கத்தைக் குறைக்கும்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு சவால்களைச் சமாளிக்கும் வாரம். தகவல் தொடர்பு, எழுத்துத் துறையினருக்கு புதிய வழிகள் திறக்கும். வாக்கு வன்மையால் காரியங்களைச் சாதிப்பீர்கள். 

புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்குச் சுமுகமான தீர்வு காண்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் இணக்கமான சூழல் நிலவும்.

அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்ப்புகள் விலகி ஆதரவு பெருகும். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். 

வெளிவட்டார நட்பு பலப்படும். வியாபாரத்தில் விற்பனை சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் கோருபவர்களுக்குச் சாதகமான உத்தரவு வரும். வர்த்தகத் துறையில் லாபம் அதிகரிக்கும். 

பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். தரகு மற்றும் கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்கு வருமானம் கூடும். தோல் ஒவ்வாமை, அரிப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். 

பருத்தி ஆடைகளை அணிவது மற்றும் அதிகப்படியான நீர் அருந்துவது சரும நலனைக் காக்கும். மகாவிஷ்ணுவுக்கு பச்சைப்பயறு நைவேத்தியம் செய்து ஏழைகளுக்குத் தானமாக வழங்குவது நலம்.

கடகம்

கடக ராசியினருக்கு மன நிறைவும் மகிழ்ச்சியும் தரும் வாரம். கற்பனைத் திறன் மற்றும் படைப்பாற்றல் வெளிப்படும். தாய் வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். 

ஆன்மீகப் பயணங்கள் மூலம் மன அமைதி பெறுவீர்கள். வாகனச் சேர்க்கை மற்றும் எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுப காரிய பேச்சுகள் கைகூடி வரும். 

அரசியல்வாதிகளுக்குத் தலைமை ஆதரவு கிட்டும். சமூகத்தில் உங்களின் சொல்லுக்கு மரியாதை கூடும். பிள்ளைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். 

பொதுத் தொண்டு செய்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் தேக்க நிலை நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். 

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்குப் லாபம் கிடைக்கும். பழைய முதலீடுகள் மூலம் எதிர்பாராத வருமானம் வந்து சேரும். தூக்கமின்மை, மனச் சோர்வு ஏற்படலாம். 

தினமும் சந்திர தரிசனம் செய்து தியானத்தில் ஈடுபடுவது வலிமை தரும். அம்பிகைக்குப் பால் அபிஷேகம் செய்வது நலம் பயக்கும். வெள்ளைத் தாமரை மலர்களைப் பூசையில் பயன்படுத்துவது மனத் தெளிவை உண்டாக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு அதிகாரமும் அந்தஸ்தும் மேலோங்கும் வாரம். அரசாங்க வழியில் சலுகைகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களில் வில்லங்கங்கள் விலகும். 

உங்களின் நிர்வாகத் திறன் மற்றவர்களால் வியந்து பாராட்டப்படும். தந்தை வழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். அரசியல் களத்தில் புதிய பதவிகளும் கௌரவமும் தேடி வரும். 

குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை வெற்றி தரும். செல்வாக்கு மிக்கவர் நட்பு கிடைக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு வரன் அமையும். உறவினர்களிடையே இருந்த போட்டிகள் மறையும்.

தொழிலில் புதிய முதலீடுகளைச் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் பொறுப்புகள் கூடும். ரியல் எஸ்டேட் மற்றும் நகை வியாபாரிகளுக்கு அனுகூலமான வாரமிது.

நிலுவையில் இருந்த வரவுகள் கைக்கு வந்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக முடியும். முதுகுத் தண்டு, எலும்புத் தேய்மானம் தொடர்பான வலிகள் வந்து நீங்கும். 

ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானுக்கு செம்பருத்திப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட ஆரோக்கியம் சித்திக்கும். நடைப்பயிற்சியை தியானமாக மேற்கொள்வது நலம் பயக்கும்.

கன்னி

கன்னி ராசியினருக்கு வெற்றி தரும் வாரம். சிக்கலான காரியங்களை எளிதில் முடிப்பீர்கள். அறிவு சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயண முயற்சிகள் கைகூடும். 

கல்வியில் மாணவர்களுக்குச் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தனித்திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். அரசியல் மற்றும் சமூகத் தொண்டில் இருப்பவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். 

நண்பர்களின் ஆதரவு மனதிற்குத் தெம்பளிக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெறும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபத்தைக் காண்பீர்கள். 

உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தரகு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்குப் பொற்காலம். வரவை விடச் செலவு கூடும் என்பதால் திட்டமிடல் அவசியம்.

ஜீரண மண்டல பிரச்சனைகள், வயிற்றுப் போக்கு ஏற்படலாம். கஞ்சி மற்றும் பழங்களை உணவில் சேர்ப்பது நல்லது. மகாவிஷ்ணுவிற்குத் துளசி மாலை அணிவித்து வழிபடுவது சிக்கல்களை நீக்கும். உணவை நேரத்திற்கு உண்பது உடல் நலனைப் பாதுகாக்கும்.

துலாம்

துலாம் ராசியினருக்கு ஆடம்பரம் நிறைந்த வாரம். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உங்களின் பேச்சு மற்றவர்களைக் கவர்ந்து இழுக்கும். 

வாகனப் பயணங்களால் அனுகூலம் கிட்டும். பெண்களால் எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும். வாழ்க்கைத் துணையுடன் சுற்றுலாச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். 

அரசியல் பிரமுகர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். சமூக விழாக்களில் கௌரவிக்கப்படுவீர்கள். உறவினர்களிடையே உங்களைப் பற்றிய நற்பெயர் பரவும். 

பிள்ளைகளின் வளர்ச்சி மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் சுமுகமான சூழல் நிலவும். கலை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். 

பொருளாதார நிலை மேன்மையடையும். சேமிப்பு உயரும். பங்குச் சந்தை முதலீடுகளில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். சிறுநீரகக் கல், நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் அடிக்கடி தண்ணீர் அருந்துவது அவசியம். 

மகாலட்சுமிக்கு இளநீர் அபிஷேகம் செய்வது, வாசனைத் திரவியங்கள் மற்றும் சந்தனத்தை அணிவிப்பது நலம் தரும். இரவில் நீண்ட நேரம் கண் விழிப்பதைத் தவிர்க்கவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு துணிச்சலும் வீரியமும் நிறைந்த வாரம். எதையும் எதிர்கொள்ளும் மனத்திடம் பிறக்கும். நிலம், கட்டிடத் துறையில் பெரும் லாபம் கிடைக்கும். 

எதிர்ப்புகளை முறியடித்து முன்னேறுவீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு மேலிடத்தின் ஆசி கிட்டும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி நிலவும். 

சகோதர வழி அனுகூலம் உண்டாகும். செல்வாக்கு மிக்கவர்களின் உதவி கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் கை ஓங்கும். நண்பர்கள் வட்டாரம் விரிவடையும்.

வியாபாரத்தில் கடும் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுண்டு. இயந்திரம் மற்றும் நெருப்பு சம்பந்தமான தொழில் செய்வோருக்கு லாபம் கூடும். 

பணப்புழக்கம் சீராக இருக்கும். பழைய கடன் தீர வழி பிறக்கும். பயணங்களில் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கால பைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடுவது சிக்கலை தவிர்க்கும்.

தனுசு

தனுசு ராசியினருக்கு தர்மமும் ஞானமும் தழைக்கும் வாரம். பெரியோர் ஆசி கிட்டும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தொலைதூரப் பயணங்களால் பெரும் பயன் உண்டாகும். 

தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நிறைவேறும். உங்களின் நற்பண்புகள் மற்றவர்களால் போற்றப்படும். குடும்பப் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். 

அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மக்கள் ஆதரவு பெருகும். உயர் பதவிகள் தேடி வரும். பிள்ளைகளின் கல்வி மற்றும் சுப காரியங்கள் மகிழ்ச்சி தரும். உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் நிலவும். 

 தொழில் ரீதியாகப் புதிய விரிவாக்கங்களைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் கௌரவம் உயரும். கல்வி, ஆலோசனை துறையில் இருப்பவர்களுக்கு லாபம் கூடும். வங்கிச் சேமிப்பு உயரும். 

வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் சேருவார்கள். வெளிநாட்டுத் தொடர்பு லாபம் தரும். கொலஸ்ட்ரால், கல்லீரல் தொடர்பான உபாதைகள் வரலாம். ஆவியில் வெந்த உணவுகளை உண்பது நல்லது. 

அன்றாடம் ஆலமரத்தைச் சுற்றி வந்து வழிபடுவது, தியானிப்பது இறையருளைப் பெற்றுத் தரும். மஞ்சள் நிறப் பொருட்களை ஏழைகளுக்குத் தானமாக வழங்கவும்.

மகரம்

மகர ராசியினருக்கு நிதானமும் பொறுமையும் வெற்றி தரும் வாரம். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். பழைய சொத்து விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு வரும். 

இக்கட்டான சூழலைத் தந்திரமாகச் சமாளிப்பீர்கள். விடாமுயற்சியால் புதிய மைல்கற்களை எட்டுவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பெரும் துணையாக இருக்கும். 

அரசியல்வாதிகள் பேச்சில் நிதானம் காப்பது நல்லது. சமூகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் கிட்டும். 

 தொழிலில் மந்த நிலை நீங்கி வேகம் எடுக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். இரும்பு மற்றும் எண்ணெய் வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சிகள் கைகூடும். நீண்ட கால முதலீடுகள் எதிர்காலத்திற்குப் பெரும் பலன் தரும். மூட்டு வலி, குதிகால் வலி போன்ற எலும்பு சம்பந்தமான உபாதைகள் தலைதூக்கும். 

எள்ளு கலந்த உணவுகளை நலம். சனி பகவானுக்கு நீல நிற மலர்களால் அர்ச்சனை செய்து ஊனமுற்றவர்களுக்கு உதவுவது நலம் தரும். நடைப்பயிற்சி அவசியம்.

கும்பம்

கும்ப ராசியினருக்கு மாற்றங்கள் நிறைந்த வாரம். உங்களின் தனித்துவம் வெளிப்படும். பொதுநலக் காரியங்களில் ஈடுபாடு கூடும். தடைப்பட்ட பயணங்கள் மீண்டும் தொடங்கும். 

நீண்ட நாள் ஆசை நிறைவேறும். அரசியலில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். சமூக வலைதளங்கள் மூலம் நற்பெயர் பெருகும். 

நண்பர்களின் ஆதரவு மனதிற்குத் தெம்பளிக்கும். திருமண முயற்சிகள் கைகூடி வரும். சுபச் செய்திகள் வந்து சேரும். உறவினர்களிடையே கௌரவம் உயரும். வியாபாரத்தில் லாபத்தைக் காண்பீர்கள். 

உத்தியோகத்தில் பணிச்சுமை இருந்தாலும் மனதிற்குப் பிடித்தமான சூழல் நிலவும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் துறையில் இருப்பவர்களுக்குப் பொற்காலம். 

நிதி நிலைமை முன்னேற்றமாக இருக்கும். இரத்த ஓட்டம், கணுக்கால் நரம்பு பிடிப்பு ஏற்படும். யோகாசனத்தில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபடுவது மன தைரியத்தையும் உடல் பலத்தையும் அளிக்கும்.

மீனம்

மீன ராசியினருக்கு மன நிறைவும் சுபிட்சமும் நிறைந்த வாரம். கனவுகள் நனவாகும். எழுத்து, கலைத் துறையில் இருப்பவர்களுக்குப் புகழும் விருதும் கிடைக்கும். 

ஆன்மீகப் பயணம், சொத்து சேர்க்கை மற்றும் லாபம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். அரசியல்வாதிகளுக்குத் தலைமையின் ஆதரவு பூரணமாகக் கிடைக்கும். 

சமூகத்தில் கௌரவமான பதவிகள் தேடி வரும். பிள்ளைகளின் வெற்றியால் பெருமை அடைவீர்கள். சுப காரிய பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். தொழில்.

வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் பாராட்டும் தேடி வரும். கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் தொடங்கும் ஆர்வம் நிறைவேறும். 

பொருளாதாரத் தட்டுப்பாடு முழுமையாக நீங்கும். கால் பாதங்களில் வீக்கம், பாத வெடிப்புத் தொந்தரவுகள் வரலாம். வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு கலந்து கால்களை நனைப்பது நலம் தரும். 

முதியோர்களுக்கு அன்னதானம் வழங்குவது உடல் நலம் காக்கும். தியானம், மௌன விரதம் மேற்கொள்வது மன ஆற்றலை மேம்படுத்தும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!