“அழகிய கொழும்புக்கு என்ன நடந்தது?” – அரசாங்கத்தின் மெத்தனப் போக்கைச் சாடும் கட்சித் தலைவர்கள்.

#SriLanka #Colombo #government #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
“அழகிய கொழும்புக்கு என்ன நடந்தது?” – அரசாங்கத்தின் மெத்தனப் போக்கைச் சாடும் கட்சித் தலைவர்கள்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் பூர்த்தியாகுவதற்கு முன்னரே, அழகாக இருந்த கொழும்பு நகரை துர்நாற்றம் வீசும் அவலட்சணமான நகரமாக மாற்றியுள்ளதாக புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை மிதக்கும் சந்தை மற்றும் கங்காராமய விகாரைக்கு அருகிலுள்ள பேரே வாவி ஆகிய பகுதிகள் இன்று கடும் துர்நாற்றம் வீசும் இடங்களாக மாறியுள்ளன.

இந்தப் பகுதிகளில் பாரியளவில் கழிவுகள் குவிந்துள்ள போதிலும், அவற்றை அகற்றுவதற்கு முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால் சூழல் மாசடைந்துள்ளதோடு, பிரதேசம் முழுவதும் துர்நாற்றம் பரவியுள்ளது இது தொடர்பில் கொழும்பு மாநகர சபையோ அல்லது தற்போதைய அரசாங்கமோ கவனம் செலுத்தவில்லை என அவர் குறிப்பிட்டார்.

கொழும்புக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் நடமாடும் இடங்களிலேயே இந்த நிலைமை காணப்படுகிறது. குறிப்பாக கங்காராமய பகுதியைச் சுற்றியுள்ள விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் இந்த துர்நாற்றத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

கொழும்பு மாநகர முதல்வர் மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோர் கொழும்பை அழகுபடுத்தும் திட்டங்கள் பற்றிப் பேசினாலும், எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) திட்டம் தோல்வியடைந்துள்ளதையே கொழும்பின் தற்போதைய நிலைமை காட்டுவதாக சுகீஸ்வர பண்டார சுட்டிக்காட்டினார்.

மேலும், நகர அலங்கரிப்பு பற்றித் தெரியாவிட்டால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சென்று டியூஷன் எடுத்துக் கொள்ளுமாறு அரசாங்கத்திடம் பரிந்துரைக்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

ஆசியாவிலேயே கவர்ச்சிகரமான நகரமாக கோட்டாபயவினால் மாற்றப்பட்ட கொழும்பு, இன்று சீரழிந்துள்ளதற்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" என வாக்களித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இன்று நாட்டிற்கு ஒரு பிச்சைக்கார தேசத்தையும் அவலட்சணமான வாழ்க்கையையுமே வழங்கியுள்ளது என சுகீஸ்வர பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!