விஞ்ஞானப் பிரிவில் வவுனியாவில் முதல் நிலை பெற்ற மாணவி சஞ்சனா
வைத்தியராக வந்து நோயாளர்களுக்கு சிறப்பாக பணியாற்றுவதே எனது இலக்கு என உயர்தரப் பெறுபேற்றில் விஞ்ஞானப் பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி சஞ்சனா குணலிங்கம் தெரிவித்துள்ளார்.
அம் மாணவி மேலும் தெரிவிக்கையில், விஞ்ஞானம் பிரிவில் நான் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலையையும் தேசிய ரீதியில் 81 ஆவது நிலையையும் பெற்றுள்ளேன்.
நான் இந்த நிலையை அடைவதற்கு எனது குடும்ப உறுப்பினர்கள் தான் முக்கிய காரணம். அடுத்தது ஆசிரியர்கள். அவர்களுக்கு நன்றிகள். உயர்தரப் படிப்பு என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி அல்ல.
எனக்கு வழிகாட்டக் கூடிய ஆசிரியர்கள், நண்பர்கள் இருந்தார்கள். எனது சகோதரிகளின் ஒத்துழைப்பும் கிடைத்தது உண்மையில் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும் என்று இல்லை.
விரும்பிப் படித்தால் ஒகே. சிலர் கஷ்டப்பட்டு மனதை வருத்திப் படிக்கிறார்கள். ஆனால் முதலில் பாடத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு சிறந்த ஆசிரியர்கள் எனக்கு கிடைத்தார்கள்.
நான் அவ்வாறு படித்ததால் விஞ்ஞானத் துறையில் சாதிக்க முடிந்தது.
பல்கலைக்கழக படிப்பை முடித்த பின் வைத்தியராக வந்து நோயாளர்களுக்கு சிறப்பாக பணியாற்றுவதே எனது இலக்கு. எனத் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )