இன்றைய ராசிபலன் (02.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4 #L4
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (02.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: முன்னேற்றமான நாள். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பரணி: சுறு சுறுப்பாக செயல்படுவீர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர். கார்த்திகை1: மறைமுகத் தொல்லை விலகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். ரோகிணி: உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த பிரச்னையை பேசி முடிப்பீர். மிருகசீரிடம் 1,2: பிறரின் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்படுவீர். நேற்றைய நெருக்கடி நீங்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: விருப்பம் நிறைவேறும். நேற்று இழுபறியாக இருந்த வேலை முடியும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருவாதிரை: உழைப்பு அதிகரிக்கும். வேலையில் கவனம் தேவை. பிறரை நம்பி வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

கடகம்

புனர்பூசம் 4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். பூசம்: எதிர்பார்த்த பணம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். கடன்காரர்கள் தொல்லை முடியும். ஆயில்யம்: நினைத்ததை சாதித்து லாபம் அடைவீர். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை சீராகும்.

சிம்மம்

மகம்: வரவால் வளம் காணும் நாள். உழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பூரம்: திட்டமிட்டு செயல்படுவீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவர். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். உத்திரம் 1: இழுபறியாக இருந்த வேலையை போராடி முடிப்பீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

கன்னி

உத்திரம் 2,3,4: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். வேலைகளில் தடையும் தடுமாற்றமும் ஏற்படும். அஸ்தம்: உங்கள் வேலையில் ஏற்பட்ட தடை நீங்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். சித்திரை 1,2: நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாகவும் இருக்கும். மாறுபட்ட சிந்தனை வேண்டாம்.

துலாம்

சித்திரை 3,4: தடைகளைத் தாண்டி வெற்றியடையும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சுவாதி: குடும்பத்தினர் நெருக்கடிக்கு ஆளாக்குவர். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு கரையும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். விசாகம் 1,2,3: இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: யோகமான நாள். வராமல் பணம் வரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அனுஷம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உங்கள் வேலை நடக்கும். கேட்டை: நேற்று சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

தனுசு

மூலம்: வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர். பூராடம்: வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வருமானத் தடை நீங்கும். உத்திராடம் 1: நேற்றைய எதிர்பார்ப்பு நிறைவேறும். பெரிய மனிதர்களை சந்திப்பீர். திட்டமிட்ட வேலை முடியும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: யோகமான நாள். இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திருவோணம்: வேலைப் பார்க்கும் இடத்தில் நெருக்கடி நீங்கும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அவிட்டம் 1,2: மனக்குழப்பம் நீங்கும். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்.

கும்பம்

அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சி வேண்டாம். வழக்கமான பணிகள் லாபம் தரும். சதயம்: குடும்பத்தில் சில பிரச்னை தோன்றும். நீங்கள் சங்கடப்படுமாறு சிலரின் செயல்பாடு அமையும். பூரட்டாதி 1,2,3: மனக்குழப்பம் ஏற்படும். எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

மீனம்

பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். உத்திரட்டாதி: அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். ரேவதி: எடுக்கும் முயற்சி பலிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!