இன்றைய ராசிபலன் (03.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4news #L4
Prasu
1 hour ago
இன்றைய ராசிபலன் (03.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். விருப்பம் நிறைவேறும். திட்டமிட்ட வேலை நடக்கும். வருமானம் அதிகரிக்கும். பரணி: முயற்சி பலிக்கும். எதிராக செயல்பட்டவர் விலகுவர். நினைப்பது நடக்கும். கோயிலுக்கு சென்று வருவீர். கார்த்திகை 1: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வியாபாரிகளுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: விருப்பம் நிறைவேறும் நாள். மேற்கொள்ளும் வேலைகளில் லாபம் உண்டாகும். ரோகிணி: குடும்பத்தில் அக்கறை அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியாக வேலை முடியும். மிருகசீரிடம் 1,2: கையில் எடுத்த வேலையை முடிக்கும் வரை வேறு சிந்தனைக்கு இடம் கொடுக்க வேண்டாம்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தால் உடல் சோர்வடையும். திருவாதிரை: முயற்சிக்கு தகுந்த பலன் உண்டு. விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: திட்டமிட்டு செயல்படுவீர். தேவை பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.

கடகம்

புனர்பூசம் 4: நன்மையான நாள். விருப்பம் நிறைவேறும். செய்து வரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பூசம்: மக்கள் சேவையில் ஈடுபடுவீர். மற்றவர் பாராட்டிற்கு ஆளாவீர். செல்வாக்கு உயரும். ஆயில்யம்: பிறரால் முடிக்க முடியாத வேலைகளை முடிப்பீர். திறமை வெளிப்படும் நாள். நெருக்கடி நீங்கும்.

சிம்மம்

மகம்: முன்னேற்றமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பூரம்: வியாபார நெருக்கடி குறையும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். தேங்கிய பொருள் விற்பனையாகும். உத்திரம் 1: விருப்பம் பூர்த்தியாகும். நவீன பொருட்கள் வாங்குவீர். பெரியோர் ஆலோசனையை ஏற்பீர்.

கன்னி

உத்திரம் 2,3,4: யோகமான நாள். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் நினைத்த லாபம் கிடைக்கும். அஸ்தம்: நினைப்பது நிறைவேறும். இழுபறியாக இருந்த வேலை முடியும். மனக்குழப்பம் விலகும். சித்திரை 1,2: நிதானமாக செயல்படுவதால் லாபம் கூடும். பிறருடன் வாக்கு வாதம் வேண்டாம்.

துலாம்

சித்திரை 3,4: வெளியூர் பயணத்தால் சோர்வு ஏற்படும். வரவு செலவில் கவனம் செலுத்துவது நல்லது. சுவாதி: உங்கள் செயல் நினைத்தபடியே நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். செலவு அதிகரிக்கும். விசாகம் 1,2,3: வேலைப் பார்க்கும் இடத்தில் உழைப்பு அதிகரிக்கும். மனம் குழப்பமடையும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.

விருச்சிகம்

விசாகம் 4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவலை உறவினர்கள் கொண்டு வருவர். அனுஷம்: செயலில் லாபம் ஏற்படும். முயற்சி நிறைவேறும். இழுபறியாக இருந்த பிரச்னை முடியும். கேட்டை: வழக்கமான செயல்களிலும் நிதானம் அவசியம். உங்களுக்காக செலவு செய்து கொள்வீர்.

தனுசு

மூலம்: நினைத்த வேலை நடக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். முயற்சி பலிதமாகும். பூராடம்: தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் வழங்க வேண்டாம். நட்புகளிடம் ஓரடி தள்ளி நிற்பது நல்லது. உத்திராடம் 1: நேற்றைய கனவு நிறைவேறும். கேட்ட இடத்திலிருந்து பணம் வரும். ஒரு சிலர் தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்.

மகரம்

உத்திராடம் 2,3,4: இழுபறியாக இருந்த வேலை முடியும். முயற்சி லாபமாகும். கோயிலுக்கு சென்று வருவீர்கள். திருவோணம்: விஐபிகள் ஆதரவு கிடைக்கும். தொழிலை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர். விருப்பம் நிறைவேறும். அவிட்டம் 1,2: உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: நிம்மதிக்கான நாள். நேற்று இருந்த நெருக்கடி நீங்கும், வரவு செலவு கட்டுக்கோப்புக்குள் வரும். சதயம்: வெளியூர் பயணம் லாபம் தரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். தெய்வ வழிபாடு நன்மை தரும். பூரட்டாதி 1,2,3: இன்று காலை வரை நெருக்கடி நிலைமை சீராகும். வரவேண்டிய பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். காலையில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எடுக்கும் வேலைகளில் நிதானம் தேவை. உத்திரட்டாதி: மனக்குழப்பம் ஏற்படும். ஒருவித பயம் தோன்றும், வெளியூர் பயணத்தில் சங்கடம் தோன்றும். ரேவதி: நினைத்த வேலை நடக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!