இன்றைய ராசிபலன் (04.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4news #L4
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (04.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: விருப்பம் பூர்த்தியாகும் நாள். தடை விலகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். செயல்கள் லாபமாகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கார்த்திகை 1: தொழில் நெருக்கடி குறையும். நினைத்ததை சாதிப்பீர். வேலைகளில் கவனம் அவசியம்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். எதிர்ப்பு விலகும். உடல்நிலை சீராகும். தொழிலில் கவனம் தேவை. ரோகிணி: வெளியூர் பயணம் லாபம் தரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். நேற்றைய பிரச்னை முடியும். மிருகசீரிடம் 1,2: இழுபறி வேலை இன்று முடியும். தொழிலில் இருந்த போட்டியாளர் விலகுவர். வருமானம் அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும். சொத்தில் அக்கறை உண்டாகும். திருவாதிரை: நீங்கள் ஈடுபடும் வேலைகளில் சிறு தடை தோன்றும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: முயற்சிக்கு ஏற்ற வருமானம் வரும். பணிபுரியும் இடத்தில் பிரச்னை தோன்றி மறையும்.

கடகம்

புனர்பூசம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். பணிபுரியும் இடத்தில் திறமை பளிச்சிடும். குடும்ப நெருக்கடி குறையும். பூசம்: வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும். போராடி சாதிப்பீர். எடுத்த வேலை முடியும். ஆயில்யம்: வியாபாரத்தில் போட்டிகளை சந்திப்பீர். உங்கள் அணுகுமுறையால் ஆதாயம் அடைவீர்.

சிம்மம்

மகம்: தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டிய நாள். மறைமுக எதிர்ப்பாளர் யார் என்பதை தெரிந்து கொள்வீர். பூரம்: விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர். முயற்சி வெற்றியாகும். சகோதரர்களால் லாபம் காண்பீர். உத்திரம் 1: முடியாத வேலையைச் செய்து முடிப்பீர். செல்வாக்கு உயரும். வருமானம் திருப்தி தரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் கவனம் அவசியம். எதிர்பார்த்த பணம் வரும். அஸ்தம்: உங்கள் முயற்சியில் முன்னேற்றம் தோன்றும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். குடும்ப நெருக்கடி குறையும். சித்திரை 1,2: பெரியோரின் ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வரவு செலவில் கவனம் தேவை.

துலாம்

சித்திரை 3,4: தெளிவாக செயல்பட்டு தேவைகளை அடையும் நாள். விருப்பம் நிறைவேறும். தொழிலில் வருமானம் கூடும். சுவாதி: உழைப்பு அதிகரிக்கும். மனம் குழப்பமடையும். செயல்களில் தடுமாற்றமும் எதிர்பார்ப்பில் தாமதமும் ஏற்படும். விசாகம் 1,2,3: செல்வாக்கு வெளிப்படும். விலகிச் சென்றவர்கள் சமாதானம் பேசுவர். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.

விருச்சிகம்

விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். செலவு வழியே நினைத்ததை சாதிப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அனுஷம்: வாகன வகையில் செலவு ஏற்படும். வெளியூர் பயணத்தில் நெருக்கடி உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். கேட்டை: எதிர்பாராத செலவு தோன்றும். புதிய முதலீடுகளை தவிர்ப்பதும், இயந்திரப் பணியில் கவனமும் தேவை.

தனுசு

மூலம்: வரவால் வளம் காணும் நாள். நீங்கள் நினைத்த வேலை நடக்கும். எடுக்கும் முயற்சி பலிக்கும். பூராடம்: வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். தேங்கி இருந்த பொருட்கள் விற்பனையாகும். உத்திராடம் 1: தன்னம்பிக்கை அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடக்கும். பொருளாதார நிலை உயரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாரத்தில் லாபம் காணும் நாள். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். பயணம் ஆதாயம் தரும். திருவோணம்: நினைப்பதை சாதிப்பீர். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பர். அவிட்டம் 1,2: உங்கள் அணுகுமுறையால் நேற்றைய பிரச்னைகள் முடிவுக்கு வரும். தொழிலில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: ஆதாயமான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். விஐபிகளால் உங்கள் வேலைகள் முடியும். எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். சதயம்: கவனமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர். பெரிய மனிதர்கள் ஆதரவால் நீங்கள் எடுத்த வேலை பலிக்கும். பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் நிலவும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உத்திரட்டாதி: சந்திராஷ்டமம் தொடர்வதால் முயற்சியில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். திடீர் நெருக்கடிக்கு ஆளாவீர். ரேவதி: வழக்கமான வேலைகளில் லாபம் காண்பீர். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!