இந்த வாரம் யாருக்கு என்ன நடக்கும்? 12 ராசிகளுக்கும் பலன்கள் உள்ளே (வீடியோ இணைப்பு)

#Astrology #Rasipalan #Weekly-Rasipalan #lanka4_news #L4
Prasu
1 hour ago
இந்த வாரம் யாருக்கு என்ன நடக்கும்? 12 ராசிகளுக்கும் பலன்கள் உள்ளே (வீடியோ இணைப்பு)

மேஷம்

இந்த வாரம் உங்கள் மனதிற்கு ஒரு புதிய தெளிவையும், ஆன்மீக பலத்தையும் தரும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் தவித்த வேலைகளை இந்த வாரம் வெற்றிகரமாக முடிப்பீர்கள். 

நீங்கள் விரும்பிய தனிப்பட்ட இலக்குகளை நோக்கிச் செல்ல இந்த வாரம் வழிவகுக்கும். குடும்பத்தில் நடக்கவிருக்கும் சுப நிகழ்ச்சிகளிலோ அல்லது பாரம்பரிய சடங்குகளிலோ நீங்கள் முக்கியப் பங்கு வகிப்பீர்கள். 

அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவும், புதிய தொடர்புகளும் கிடைக்கும். வியாபாரத்தில் ஸ்திரத்தன்மை கூடும். 

புதிய தொழில் தொடங்குவதை விட, நிலுவையில் உள்ள அரசு ரீதியான சிக்கல்களைத் தீர்க்க இது சிறந்த நேரம். பணவரவு சீராக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமையை சக ஊழியர்களும் கீழ் பணிபுரிபவர்களும் பாராட்டுவார்கள்.

கண் எரிச்சல், தூக்கமின்மை போன்ற உபாதைகள் வந்து நீங்கும். செவ்வாய்க்கிழமை அன்று ஏழைகளுக்கு துவரம் பருப்பை தானமாக வழங்குவதும், பசித்தவர்களுக்கு உணவளிப்பதும் பாதுகாப்பையும், முன்னேற்றத்தையும் தரும்.

ரிஷபம்

இந்த வாரம் உங்களுக்கு லாபங்களையும், சமூகத்தில் உயர்ந்த இடத்தையும் தேடித்தரும். கடந்த கால உழைப்பிற்கான பலனை இப்போது அறுவடை செய்வீர்கள். 

உங்கள் கனவுத் திட்டங்கள் மீண்டும் உயிர் பெறுவது அன்றாட வாழ்க்கையில் புதிய உற்சாகத்தைத் தரும். உங்களின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். 

மூத்த சகோதரர்கள் அல்லது தந்தை வழி உறவுகளுடன் பிணக்குகள் நீங்கி உறவு பலப்படும். நீங்கள் ஒரு அமைப்பின் தலைவராகவோ, பிரதிநிதியாகவோ இருந்தால், உங்கள் பேச்சுக்கு வரவேற்பு கிடைக்கும். 

தொழில் துறையில் இது ஒரு பொற்காலம். வியாபாரத்தை விரிவுபடுத்தவும், புதிய சந்தைகளை ஆராயவும் ஏற்ற நேரம். கூட்டு முயற்சிகள் நல்ல லாபம் தரும். 

பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்கும். பொருளாதார நிலை வலுவடையும். செரிமானக் கோளாறுகள் அல்லது உடல் சோர்வு ஏற்படலாம். 

வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றுவதும், பெரியவர்களுக்கு உதவி செய்வதும், ஆன்மீகப் பணிகளுக்கு பங்களிப்பதும் உங்கள் செல்வாக்கை உயர்த்தும்.

மிதுனம்

இந்த வாரம் நீங்கள் புகழின் உச்சிக்குச் செல்வீர்கள். உங்கள் துறையில் முக்கியமான மைல்கல்லை எட்டுவீர்கள். எதையும் துல்லியமாகச் செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் ஆசையான பதவி அல்லது அதிகாரத்தையும் அடைய காலம் கனிந்துள்ளது.

பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் குடும்ப முன்னேற்றம் குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சமூகத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைக்கும் ஒரு மத்தியஸ்தராகச் செயல்படுவீர்கள். 

உங்கள் சமூக அந்தஸ்து உயரும். புதிய விருதுகளோ, கௌரவங்களோ தேடி வரும். தொழில் மற்றும் வியாபார ரீதியாக இது சுறுசுறுப்பான வாரம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பொறுப்புகள் கூடும். 

புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதன் மூலம் உங்கள் பொருளாதார நிலைமை முன்பை விட மிக வலிமையாக மாறும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. நரம்புத் தளர்ச்சி அல்லது தோள்பட்டை வலி ஏற்படலாம். 

புதன்கிழமை அன்று அம்பிகைக்கு பச்சைப்பயறு நைவேத்தியம் செய்யவும். தினமும் சிறிது நேரம் மௌனமாக இருப்பது மன அமைதி தரும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது தடைகளை நீக்கி வெற்றி தரும்.

கடகம்

இந்த வாரம் வாழ்க்கைப் பாதை குறித்த தெளிவும், நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த சொத்து விவகாரங்களில் சாதகமான முடிவு கிட்டும். 

புண்ணியத் தலங்களுக்குப் பயணம் மேற்கொள்வதன் மூலம் மனதிற்கு ஆழ்ந்த நிம்மதியும் ஆன்மீகத் திருப்தியும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் பெரியவர்களின் ஆசி உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும். 

குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடும் வகையில் மத வழிபாட்டை நீங்கள் முன்னின்று நடத்துவீர்கள். சமூக மற்றும் அரசியல் தொடர்புகளில் உங்கள் கனிவான பேச்சு பல ஆதரவாளர்களைப் பெற்றுத்தரும்.

ஏற்றுமதி-இறக்குமதி, சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. கல்வி அல்லது சட்டத் துறையில் இருப்பவர்களின் ஆலோசனைகளுக்கு அதிக மதிப்பு கிடைக்கும். 

பெரிய அளவிலான புதிய முதலீடுகளுக்குப் பொறுமை தேவை. கால்கள் அல்லது இடுப்பு பகுதிகளில் வலிகள் வரலாம். திங்கட்கிழமை அன்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதும், ஏழைகளுக்குப் பச்சரிசி அல்லது வெள்ளை ஆடைகளைத் தானமாக வழங்குவதும் நல்லது.

சிம்மம்

இவ்வாரம் எதிர்பாராத வழிகளில் தடைகள் நீங்கி வெற்றி கிட்டும். கடினமான சூழலையும் உங்கள் கண்ணியமான நடத்தையால் கையாளுவீர்கள். 

மறைக்கப்பட்ட உண்மைகள் சிலவற்றை அறிந்துகொள்வது உங்கள் எதிர்காலத் திட்டங்களுக்கு உதவியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்போது நிதானம் கடைப்பிடிக்கவும். 

நண்பர்களுடன் வீண் விவாதம் தவிர்க்கவும். அரசியலில் இருப்பவர்கள் நம்பிக்கைக்குரியவர் ஆலோசனைகளை மட்டும் கேட்கவும். புதிய நபரின் சந்திப்பு சாதகமான மாற்றத்தைத் தரும்.

தொழிலில் புதிய விரிவாக்கங்களைத் தவிர்த்து, இருப்பதைத் தக்கவைத்துக் கொள்ளவும். கொடுக்கல்-வாங்கலில் சிறு தாமதங்கள் ஏற்படும். 

தொழில் செய்பவர்கள் தங்கள் நிர்வாகத்தை நல்ல நேரம். இன்சூரன்ஸ், போனஸ், பழைய முதலீடுகள் மூலம் பணவரவு கிடைக்கும். நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். 

தினமும் அதிகாலையில் சிவபெருமானை வழிபடுவதும், கோதுமை தானம் செய்வதும், பணியாளர்களிடம் அன்பாக நடந்துகொள்வதும் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும்.

கன்னி

இந்த வாரம் தனித்துச் செயல்படுவதை விட மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாகப் பேசி வந்த ஒரு ஒப்பந்தம் அல்லது தனிப்பட்ட உறுதிமொழி இந்த வாரம் நிறைவேறி, வாழ்வில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர புரிதல் அதிகரித்து பிணைப்பு பலப்படும். அரசியல் மற்றும் சமூகப் பணியாளர்கள் மக்களின் குறைகளைத் தீர்ப்பதன் மூலம் செல்வாக்கு பெறுவார்கள். 

அதிகார மையத்தில் உள்ளவர்களுடன் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள ஏற்ற வாரம். தொழில் துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். 

கூட்டுத் தொழில் செய்பவர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் இணக்கமான உறவைக் கொண்டிருப்பார்கள். அது தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும். சிறுநீரகம், முதுகு வலி தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டு விலகலாம். 

விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடலாம். பொது இடங்களை அல்லது கோயில்களைத் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதும், நேர்மையாக நடப்பதும் நலம் பல தரும்.

துலாம்

ஆறாம் வீட்டில் சூரியன் பலமாக இருப்பதால், நீண்ட நாட்களாக வாட்டிய தடைகள் விலகும். வைத்திய சிகிச்சைகள் பலிதமாகும். அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் புதிய பாதைகள் புலப்படும்.

சமூகத்தில் மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் ஒரு வழிகாட்டியாக நீங்கள் திகழ்வீர்கள். குடும்ப உறவுகள் சீராக இருக்கும். அரசியல் மற்றும் பொதுச் சேவையில் உள்ளவர்கள் தங்கள் கொள்கைகளில் உறுதியாக இருக்க வேண்டிய நேரம் இது. உங்கள் துணிச்சல் உங்கள் மதிப்பைக் கூட்டும்.

தொழிலில் போட்டி இருந்தாலும், உழைப்பிற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். வராத கடன்கள் வசூலாகும். வியாபாரிகள் தங்கள் தேவையற்ற செலவுகளைக் குறைத்து லாபத்தை அதிகரிப்பார்கள். 

உத்தியோகஸ்தர்கள் பணி சார்ந்த புதிய பயிற்சி பெறுவார்கள். செரிமான கோளாறுகள் ஏற்பட்டு தக்க சிகிச்சையால் விலகும். முடிந்தவரை எள் அல்லது நல்லெண்ணெய் தானம் செய்வதும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வதும், அசைவ உணவுகளை தவிர்ப்பதும் பல நன்மைகளை ஏற்படுத்தும். 

விருச்சிகம் 

விருச்சிக ராசியினருக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உங்கள் படைப்பாற்றல் மற்றும் அறிவுத்திறன் மிளிரும் வாரம். 

உள்ளுணர்வு துல்லியமாகச் செயல்படுவதால், நீண்ட கால இலக்குகளை அடைய எடுக்கும் முடிவுகள் சரியானதாக அமையும். குடும்ப உறவுகளில் அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். 

அரசியலில் இருப்பவர்கள் புதுமையான கருத்துக்களால் மக்களைக் கவர்வார்கள். மற்றவர்களை ஈர்க்கும் பேச்சும், நேர்மையான செயல்பாடுகளும் உங்களைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

வியாபாரத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்த இது நல்ல நேரம். கலை, கல்வி மற்றும் ஆலோசனை வழங்கும் துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல காலம். 

ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் சந்தித்த தடைகள் விலகும். வயிற்றுப் பகுதி பாதிப்புகள் மற்றும் மன அழுத்தம் மீது கவனம் செலுத்தவும். 

அருகிலுள்ள கோவிலில் தினமும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும். ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவுவதும், குலதெய்வத்தை வணங்குவதும் இந்த வாரத்தை இன்னும் சிறப்பாக்கும்.

தனுசு 

இந்த வாரம் குடும்ப மகிழ்ச்சியைத் தரும் வாரமாக அமையும். நிலம், வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. பழைய வீட்டைச் சீரமைக்கவோ, அலங்கரிக்கவோ தக்க சமயம இது. மனதிற்குள் இருந்த நீண்ட நாள் கவலை மறைந்து நிம்மதி கிடைக்கும். 

குடும்பம் மற்றும் சமூக உறவுகள் இனிமையாக இருக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். அரசியலில் உள்ளவர்கள் அடிமட்டத் தொண்டர்களுடன் தொடர்பை பலப்படுத்திக்கொள்ள வேண்டிய நேரம். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பு கூடும். 

தொழில் மற்றும் நிதி நிலையில் ஸ்திரத்தன்மை நிலவும். வியாபாரிகள் ஊழியர்களின் நலனில் அக்கறை காட்டுவது உற்பத்தியைப் பெருக்க உதவும். உங்கள் சொத்துக்களை பெருக்கவும் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் இது நல்ல காலம். 

சளி மற்றும் இதயம் தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். குலதெய்வத்துக்கு மஞ்சள் நிற மாலை சூட்டி வழிபடுவதும் கொண்டைக்கடலை தானம் செய்வதும் சிறப்பு. மரம் நடுதல். நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்துவது நற்பலன் தரும். 

மகரம் 

இந்த வாரம் உங்கள் தைரியமே உங்கள் பலமாக இருக்கும். பயணங்கள், தகவல் தொடர்பு மற்றும் துணிச்சலான முடிவுகள் மூலம் காரிய வெற்றி உண்டு. 

மற்றவர்கள் செய்யத் தயங்கும் கடினமான வேலைகளை முன்னின்று செய்து முடிப்பீர்கள். தம்பி, தங்கைகள் மற்றும் அண்டை வீட்டாருடன் இணக்கமான சூழல் நிலவும். சமூகப் பணிகளில் உங்களின் அனுபவம் சார்ந்த ஆலோசனைகளுக்குப் வரவேற்பு இருக்கும்.

அரசியல்வாதிகள் தங்கள் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல இது மிகச் சரியான தருணம். தொழில் மற்றும் நிதி நிலையில் அதிரடியான மாற்றங்கள் உண்டாகும்.

மக்கள் தொடர்பு மூலம் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். ஊடகம், எழுத்து மற்றும் விற்பனைத் துறையில் உள்ளவர்களுக்கு பொற்காலம். 

கடந்த கால உழைப்பிற்கான பலன் இப்போது கையில் சேரும். சுவாச பிரச்சினைகள் ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். அனுமனை வழிபட்டு வெற்றிலை மாலை சாற்றவும். 

அண்டை வீட்டாருக்கு உதவுவதும், வேலையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதும், ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவுவதும் இறை அருளைப் பெற்றுத்தரும். 

கும்பம்

இந்த வாரம் உங்கள் கவனம் நிதி நிலைமையின் மீது இருக்கும். நிதி ரீதியான சரியான திட்டமிடல் மூலம் உங்கள் இலக்குகளை எட்டுவீர்கள். 

குடும்பச் சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்கள் மதிப்பார்ந்த வாழ்க்கை முறை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அமையும். குடும்ப உறவுகள் பலப்படும், உங்கள் பேச்சிற்கு வீட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். 

அரசியலில் இருப்பவர்கள் உண்மையை மட்டும் பேசி மக்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். ஒரு முக்கியமான சமூக விவாதத்தில் உங்கள் சமூகத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. 

தொழில் ரீதியாக வங்கி, நிதி மற்றும் நகை வியாபாரத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். நிலுவையில் உள்ள கடன்களைத் தீர்க்கவும், புதிய ஒப்பந்தங்களை உருவாக்கவும் இது நல்ல நேரம். வார இறுதியில் நிதி நிலைமை மேம்படும். 

தொண்டை அல்லது பற்களில் பாதிப்புகள் ஏற்பட்டு விலகும். பசுக்களுக்கு உணவளிப்பதும், குறைவாக பேசுவதும், உங்களிடம் பணிபுரிபவர்களிடம் அன்பாக நடப்பதும் உங்கள் கர்ம வினைகளைக் குறைத்து பல்வேறு நலன்களை கொண்டு வரும். 

மீனம் 

இந்த வாரம் உடல் நலம் மேம்படும். புதிய முயற்சிகளைத் தொடங்க உகந்த நேரம். சமூகத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும்.

தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவப் பண்பு உங்களை மற்றவர்களின் பார்வையில் ஒரு உயர்ந்த இடத்தில் வைக்கும். குடும்பத்தினர் உங்கள் வழிகாட்டுதலை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். 

சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் உங்கள் அதிகாரம் மேலோங்கும். கடந்த காலங்களில் நீங்க செய்த நல்ல விஷயங்கள் மக்களிடையே உங்களுக்கு செல்வாக்கை உண்டாக்கும். 

தொழில் துறையில் மரியாதையும் அதிகாரமும் தேடி வரும். வியாபாரத்தில் உங்கள் நேரடிப் பார்வையும் மேற்பார்வையும் லாபத்தை இரட்டிப்பாக்கும். 

உயர் பதவியில் இருப்பவர்கள் எடுக்கும் முடிவுகள் எளிதாகச் செயல்படுத்தப்படும். தலைவலி மற்றும் அலர்ஜி ஆகியவற்றால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவத்தால் சீரடையும். 

முடிந்தவரை சிவபெருமானுக்கு வில்வ இலை அர்ச்சனை செய்வதும், ஆசிரியர்கள் மற்றும் குரு ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு பரிசுகள் கொடுத்து வாழ்த்துக்கள் பெறுவதும் நல்லது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!