IPL M13 - மும்பை மற்றும் ராஜஸ்தான் இடையிலான போட்டி மழையால் ஆரம்பிப்பதில் தாமதம்

#IPL #T20 #Cricket #Rajasthan #Mumbai #2026
Prasu
2 months ago
IPL M13 - மும்பை மற்றும் ராஜஸ்தான் இடையிலான போட்டி மழையால் ஆரம்பிப்பதில் தாமதம்

இந்தியாவில் 19வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

இந்நிலையில் இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் மோதவுள்ளது. 

7 மணிக்கு நாணய சுழற்சி நடைபெற வேண்டிய நிலையில் மழை காரணமாக நாணய சுழற்சி போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தற்போதய நிலவரப்படி, இந்த போட்டியின் நாணய சுழற்சி 9.55 போடப்படவுள்ளதாகவும் போட்டி 11 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு அணிகள் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 16ல் மும்பையும் 14ல் ராஜஸ்தானும் வெற்றி கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4