நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் கைது

#SriLanka #Arrest #government #NuwaraEliya #Lanka4 #PradeshiyaSabha
Prasu
3 months ago
நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் கைது

நுவரெலியா பிரதேச சபையின் தவிசளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான வேலு யோகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறையற்ற விதத்தில் கட்டிட வரைபடம் ஒன்றிற்கு அனுமதி வழங்கியமை மற்றும் விண்ணப்பதாரர் ஒருவருக்கு சட்டவிரோத அனுகூலங்களைப் பெற்றுக்கொடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல், சட்டவிரோதமான முறையில் கட்டிடத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியதாக தவிசாளருக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றிருந்தன. 

இது தொடர்பாக நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்ட இரகசிய விசாரணைகளைத் தொடர்ந்தே இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தவிசாளர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, வரம்புகளை மீறி விண்ணப்பதாரர் ஒருவருக்கு சாதகமாக செயற்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அரச விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4