இன்றைய ராசிபலன் (10.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
மேஷம்
அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். பரணி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பெரியோர் உதவியால் வெளியூர் பயணத்தில் நன்மை ஏற்படும். கார்த்திகை 1: எடுக்கும் முயற்சி பலிக்கும். வருவாயில் ஏற்பட்ட தடை நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். இன்று வாக்கு வாதம் வேண்டாம். அனைத்திலும் அமைதி காப்பது நல்லது. ரோகிணி: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். மனம் குழப்பமடையும். மிருகசீரிடம் 1,2: முயற்சியால் போராடி வெற்றி பெறுவீர். உங்கள் வேலைகளை பிறரிடம் கொடுப்பதையும் தவிர்க்கவும்.
மிதுனம்
மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். செயல்களில் எதிர்பார்த்த லாபம் தோன்றும். திருவாதிரை: திட்டமிட்டு செயல்பட்டு நன்மையடைவீர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். நண்பர்களால் உதவி உண்டாகும். புனர்பூசம் 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.
கடகம்
புனர்பூசம் 4: உங்கள் செல்வாக்கு உயரும் நாள். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். இழுபறி வேலை முடியும். பூசம்: நினைத்தது நடக்கும். மனதில் தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் எதிரி தொல்லை விலகும். எதிர்பார்த்த வரவு வரும். ஆயில்யம்: விவேகத்துடன் செயல்பட்டு வெற்றியடைவீர். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். புதிய முயற்சி வேண்டாம்.
சிம்மம்
மகம்: எண்ணியதை நடத்தி முடிக்கும் நாள். துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். பூரம்: உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும்.போராடி வெற்றி அடைவீர். எதிலும் கவனம் தேவை. உத்திரம் 1: புத்தி சாலித்தனத்துடன் செயல்படுவீர். நினைத்ததை நடத்தி முடிப்பீர். உறவினரால் நன்மை உண்டாகும்.
கன்னி
உத்திரம் 2,3,4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். தாய்வழி உறவினர் முயற்சிக்கு ஆதரவு உண்டாகும். எதிர்பார்த்த வரவு வரும். அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் வேலைபளு கூடும். மனம் ஓய்வை விரும்பும். சித்திரை 1,2: நினைத்ததை நடத்தி முடிப்பீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.
துலாம்
சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.ஆரோக்யம் சீராகும். சுவாதி: வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தடைபட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். விசாகம் 1,2,3: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்.
விருச்சிகம்
விசாகம் 4: வருவாயால் வளம் காணும் நாள். எதிர்பார்த்த பணம்வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். அனுஷம்: வேலைபளு அதிகரிக்கும். உங்கள் செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். கேட்டை: உங்கள் திறமை வெளிப்படும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உடல்நிலையில் கவனம் தேவை.
தனுசு
மூலம்: உற்சாகமான நாள். செயலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய சிந்தனை மேலோங்கும். வருமானம் அதிகரிக்கும். பூராடம்: மனக் குழப்பம் தோன்றும். வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். நிதானமாக செயல்படுவது நல்லது. உத்திராடம் 1: நினைப்பது நிறைவேறும். சிரமங்களில் இருந்து விடுபடுவீர். தொழிலில் வருமானம் அதிகரிக்கும்.
மகரம்
உத்திராடம் 2,3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். மதியம்வரை செலவும் அலைச்சலும் அதிகரிக்கும். திருவோணம்: வேலைப்பார்க்கும் இடத்தில் பிரச்னை தேடிவரும். எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். நெருக்கடி அதிகரிக்கும். அவிட்டம் 1,2: புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. கடன் கொடுப்பதை முடிந்த வரை தவிர்க்கவும்.
கும்பம்
அவிட்டம் 3,4: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். சதயம்: நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.சேமிப்பு உயரும். பூரட்டாதி 1,2,3: வியாபாரம் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.
மீனம்
பூரட்டாதி 4: உற்சாகமாக செயல்படக்கூடிய நாள். இழுபறி வேலை முடியும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.
உத்திரட்டாதி: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். திறமை வெளிப்படும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும்.
ரேவதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். புதிய வாடிக்கையாளர் வருவர்.கையில் பணம் வரும்.
(வீடியோ இங்கே )