இன்றைய ராசிபலன் (26.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4news #L4
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (26.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். இன்று மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடுவதோ, பொறுப்பு எடுத்துக் கொள்வதோ கூடாது. தூக்கமின்மை, கனவுத் தொல்லை, ஒருவித படபடப்பு வந்துச் செல்லும். புதிய முயற்சிகள் பலிதமாகும்.

ரிஷபம்

எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கவலை வேண்டாம் அவை அனைத்தும் சரியாகும். கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். உணவில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தில மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்

வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். சிலர் அண்டை மாநிலம், வெளிநாடு சென்று வருவீர்கள். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வேலைச்சுமை இருக்கும்.

கடகம்

திருமணம் போன்ற சுபவிசேஷங்கள் நடந்தேறும். சிலருக்குப் புதிய வீடு கட்டவோ அல்லது வாங்கவோ அதற்கான அமைப்பு உண்டாகும். வியாபாரிகளுக்கு செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் இல்லையென்றாலும் நஷ்டம் ஏற்படாமல் இருக்கும். விலகியிருந்த நண்பர்கள் இனி நெருங்கி வருவார்கள்.

சிம்மம்

நீங்கள் யாருக்கேனும் கடன் கொடுத்தால் அந்தப் பணம் சீக்கிரம் வந்து சேராது. ஆதலால் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பர். டாக்குமன்ட் சம்பம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் அவை தீர்ந்து விடும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். திருமணம் விசயங்களில் நன்மை உண்டு.

கன்னி

விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வந்து போகும். உத்யோகத்தில் வேலைபளு மிகும் மாணவர்கள் திட்டமிட்டு படிப்பர். அலைச்சல் அதிகரிக்கும்.

துலாம்

தொலைதூர ஆலயங்களுக்குச் சென்று வரும் வாய்ப்புண்டு. மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அவசியம். விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரிகள் கிளைகளை துவங்குவர். மாணவர்கள் நன்கு படித்து நினைத்த இலக்கினை எட்டுவர்.

விருச்சிகம்

உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் உதவுவர். சிலருக்கு வீடு அல்லது அலுவலக இடமாற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் ஆர்வமில்லாமல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நேரத்தை வீணடிப்பதை தவிர்த்தால் அதிக மதிப்பெண்களை பெறலாம்.

தனுசு

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

மகரம்

வியாபாரிகளுக்கு லாபம் இரட்டிப்பாக உயரும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வதால் வெளிநபர்களின் தொடர்பும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் நீங்களே எந்த ஒரு காரியத்தையும் செய்யும் சூழ்நிலை உண்டாகும்.

கும்பம்

தகப்பனாரின் உடல்நிலையில் கவனம் அவசியம். பிள்ளைகள் தங்கள் பொறுப்பை உணர்வர். எவ்வளவு பணம் வந்தாலும் அதை சேமிக்க முடியாது என்ற நிலை மாறி அதிகளவு . வைப்புத் தொகையாக வங்கியில் டெபாசிட் செய்வீர்கள். குடும்பத்தில் அன்னியர்களின் தலையீடு உண்டாகும்.

மீனம்

தம்பதிகளிடையே ஒற்றுமை பலப்படும். கலைஞர்களின் கோரிக்கை நிறைவேறும். பண விஷயத்தில் யாரையும் நம்பி இருக்க வேண்டாம். எந்த முடிவாக இருந்தாலும் தாங்களே முடிவெடுத்துச் செயல்படுவது நல்லது. தாய்வழி உறவு முறைகளால் சிறிது நன்மையை எதிர்பார்க்கலாம்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!