சமூக ஊடகங்களில் ஆபாசப் படங்களைப் பகிர்ந்த விவகாரம்: பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி!
சக பாடசாலை மாணவிகளையும் பெண் ஆசிரியர்களின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படங்களை நிர்வாணப்படுத்தி சக நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்த மூன்று மாணவர்கள் நாளைய தினம்(29) வரை தடுப்புக் காவல் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
உடுத்துறைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று தற்சமயம் சாதாரன தரப் பரீட்சை எழுதிய ஆறு மாணவர்கள் இந்த செயலை புரிந்துள்ளதாக பாடசாலை அதிபரினால் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 17 வயதுடைய 3 மாணவர்களும் இன்றைய தினம்(28) கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஐர்ப்படுத்தப்பட போது நீதவான் பொன்னுத்துரை கிருஷாந்தன் நாளைய தினம் (29) வரை, அச்சுவேலி பகுதியில் உள்ள அரச சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் தடுத்து வைக்க சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு கட்டளை பிறப்பித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேக நபர்கள்(மாணவர்கள்) கைது செய்ய வேண்டி இருப்பதாக பொலிசார் நீலவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
(வீடியோ இங்கே )