சமகால அரசுக்குள் நடந்த பாரிய நிதி மோசடி: உண்மைகளை வெளிப்படுத்தவுள்ள ஜனாதிபதி அநுர!

#government #President #ImportantNews #Finance #AnuraKumaraDissanayake #L4
Lakhi
2 hours ago
சமகால அரசுக்குள் நடந்த பாரிய நிதி மோசடி: உண்மைகளை வெளிப்படுத்தவுள்ள ஜனாதிபதி அநுர!

அவுஸ்திரேலியாவுக்கு செலுத்த வேண்டிய கடன் தவணைப் பணமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திறைசேரியில் இருந்து காணாமல் போயுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விளக்கமளிக்கவுள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளர். இந்தத் தகவலை திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, அரசாங்க நிதி குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து விளக்கமளிப்பதற்காக அரசாங்க நிதி குழுவின் முன்னிலையில் இன்று முன்னிலையாகுமாறு திறைசேரி செயலாளருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இன்றைய தினம் முன்னிலையாகப் போவதில்லை என்பதை கடிதம் மூலம் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவிற்கு தெரியப்படுத்தியுள்ளார். குறித்த கடிதத்தில், இந்த நிதி மோசடி அல்லது காணாமல் போனமை தொடர்பான விபரங்களை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தவுள்ளார். இதனால், தாம் தற்போதைக்கு குழு முன்னிலையில் முன்னிலையாக வேண்டிய அவசியம் இல்லை என திறைசேரி செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!