நீர்கொழும்பு மோதல்களுக்கு மத்தியில் விஜேதாசவை திடீரென சந்தித்தார் ரணில்!
முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் மகன் ரகித நிர்மல ராஜபக்ச உள்ளிட்ட சிலர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களிடமிருந்து கப்பம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திடீரென விஜேதாச ராஜபக்சவின் வீட்டிற்குச் சென்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், விஜேதாச ராஜபக்ச நீதியமைச்சராக இருந்தபோது, 2023ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் இவ்வாறான கப்பம் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகிறது.
ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் துபாய்க்குச் சென்று, நதுன் சிந்தக எனப்படும் ஹரக் கட்டா என்பவரிடமிருந்து 12 கோடி ரூபா கப்பத் தொகையை பெற்றுள்ளதாகவும், அதே காலப்பகுதியில் அப்போதைய நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவும் துபாயில் தங்கியிருந்ததாகவும் சாட்சியங்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச 2023ஆம் ஆண்டின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், துபாயில் அமைந்துள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக அங்கு தங்கியிருந்ததாக தெரிவித்திருந்தார்.
மேலும், ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவர் அந்த வைத்தியசாலைக்கு வந்து தன்னை சந்தித்ததாகவும் விஜேதாச ராஜபக்ச ஏற்றுக்கொண்டிருந்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே