மக்கள் பலம்! நுவரெலியாவில் ஜனாதிபதி அநுர தலைமையில் பிரம்மாண்ட மே தினப் பேரணி.

#SriLanka #people #NuwaraEliya #Power #Lanka4 #President #AnuraKumaraDissanayake #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
மக்கள் பலம்! நுவரெலியாவில் ஜனாதிபதி அநுர தலைமையில் பிரம்மாண்ட மே தினப் பேரணி.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்தப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. நுவரெலியா ஹவ எலியா பகுதியில், பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் இந்தப் பேரணி உற்சாகமாக ஆரம்பமானது.

நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற அணிவகுப்பு, கிரிகரி வாவிப் பகுதியில் அமைந்துள்ள பிரதான மேடையை வந்தடைந்தது.

நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய இரு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

"மக்கள் ஆட்சிக்கு - மக்கள் பலம்" எனும் தொனிப்பொருளின் கீழ், மலையக மக்களின் நீண்டகாலத் தேவைகள் மற்றும் உரிமைகளை வென்றெடுப்பதற்கான உறுதிமொழிகள் இங்கு முன்னிலைப்படுத்தப்பட்டன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4