செம்மணி மனிதப் புதைகுழி - இரு எலும்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Semmani human burial
Thamilini
2 months ago
செம்மணி மனிதப் புதைகுழி - இரு எலும்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!

செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 8-ஆம் நாளான இன்று (05), குழந்தையின் எலும்புக்கூடு உட்பட இரண்டு மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 

 அத்துடன், தங்கம் எனச் சந்தேகிக்கப்படும் ஆபரணம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 இன்றைய அகழ்வாராய்ச்சியின் போது 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொகுதிகளிலிருந்து, ஒரு குழந்தையின் எலும்புக்கூடு மற்றும் மற்றுமொரு எலும்புக்கூடு என இரண்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 

இதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை மொத்தம் 255 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 249 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4