வளிமண்டல சீர்குலைவு - பல பகுதிகளிலும் தொடரும் மழை!
இடைவெப்பமண்டல குவிவு மண்டலத்தின் (ITCZ) தாக்கத்தினாலும், தீவின் அருகாமையில் கீழ்மட்ட வளிமண்டல சீர்குலைவு உருவாவதாலும், இன்று (06) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற்பகல் 1.00 மணிக்கு மேல் நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை குறிப்பிட்டுள்ளது.
காலை நேரங்களில் தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )