அமைச்சர் அனுர கருணாதிலக்கவின் அதிரடி அறிவிப்பு: விமான சேவையில் மாற்றம்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அரச வங்கிகளில் பெற்றிருந்த 91.3 பில்லியன் ரூபா கடன் மறுசீரமைப்புப் பணிகள் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ரவி கருணாநாயக்கவின் கேள்விக்கு பதில் நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த முக்கிய தகவல்களை வெளியிட்டார்.
திறைசேரி, வங்கிப் பணிப்பாளர் சபை மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆகியவற்றிற்கு இடையே கடன் மீள்செலுத்தும் பொறிமுறை குறித்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மூலதனம்: அரச வங்கிகளுக்கான கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக, அரசாங்கம் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் இருமுறை விமான நிறுவனத்திற்கு மூலதனத்தை வழங்கி வருகின்றது.
175 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான சர்வதேச இறையாண்மை பிணைமுறி உத்தரவாதத்தை மறுசீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வணிக மாதிரி (New Business Model) தேசிய விமானச் சேவையை தற்போதைய நிலையிலேயே காலவரையின்றிக் கொண்டு செல்ல அரசாங்கம் விரும்பவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதற்காக: திறைசேரி மற்றும் அமைச்சு மட்டத்தில் புதிய வணிக மாதிரியைத் தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முதலீட்டாளர் பங்களிப்பு: பொது-தனியார் பங்களிப்பு (PPP), முகாமைத்துவ ஒப்பந்தம் (Management Contract) அல்லது முழுமையான அரச உடைமை ஆகிய விருப்பங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
தேசிய விமானச் சேவை நஷ்டமின்றி இயங்குவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் தொடர்ந்து நிதியுதவி வழங்கும் என அமைச்சரவை மற்றும் திறைசேரிச் செயலாளர் எழுத்து மூலம் உறுதியளித்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )