இன்றைய ராசிபலன் (07.05.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
மேஷம்
வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபத்தை காண்பர். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புவர். குடும்பத்துடன் வெளிநாடு சுற்றிப் பார்க்க திட்டமிடுவர். காதல் கசக்கும்.
ரிஷபம்
இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் சிறு சிறு விபத்துகள் அல்லது காரியத் தடை ஏற்படலாம். ஆதலால், இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது.
மிதுனம்
வாகன பராமரிப்பு செலவு ஏற்படும். வெளியூர் பயணம் வெற்றி தரும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர். உடல்நிலை நன்றாக இருக்கும். மார்கெட்டிங்பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர். கணினி துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வர்.
கடகம்
குறித்த நேரத்தில் உணவு உட்கொள்ளுங்கள். பெண்கள் சுயதொழிலில் முன்னேற்றம் காண்பர். விருந்து விழா என்று கலந்து கொள்வீர்கள். உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அனுசரிப்பது நல்லது. ஆவணங்களை பாதுகாப்பீர்கள். உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம்.
சிம்மம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சுப காரியம் கைகூடும். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். தாயார் தங்களுக்கு உதவிகரமாக இருப்பார். நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது.
கன்னி
நினைத்த காரியம் வெற்றி பெறும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். சிறு வியாபாரிகளுக்கு விற்பனை மிகும். பெரிய விசயங்கள் சட்டென்று முடியும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த ஒரு நற்செய்தி வரும். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர்.
துலாம்
ஷேர் மூலம் பணம் வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து கொண்டு அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வரும். திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும்.
விருச்சிகம்
குடும்பத்தில் குதூகலம் தங்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை. வங்கியில் நீங்கள் விரும்பிய சொந்த இடம் வாங்க எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள்.
தனுசு
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பொதுநலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. கை, கால் வலி வந்துப் போகும். திடீர் உள்ளூர் பயணங்கள் வந்துப் போகும். ஒரு சிலர் நவீன வாகனம் வாங்குவீர்கள்.
மகரம்
நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். தாயார் தங்களுக்கு உதவிகரமாக இருப்பார். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சுப காரியம் கைகூடும்.
கும்பம்
வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தம்பதிகளிடையே மனஸ்தாபம் ஏற்படும். விட்டுக் கொடுத்து செல்லவும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மதிப்பார்கள். மாணவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்து கொள்வது நல்லது. வீட்டை அலங்கரிப்பீர்கள்.
மீனம்
பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் செல்வதில் திட்டங்கள் மாறும். உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவர்.உடல் நலம் பளிச்சிடும். வாகனத்தில் கவனம் தேவை.
(வீடியோ இங்கே )