உலகளாவிய ரீதியில் பரவும் ஹன்டா வைரஸின் அறிகுறிகள் - அனைவர்க்கும் பகிரவும்

#Death #France #Switzerland #Disease #Lanka4 #Virus #adenovirus
Prasu
3 hours ago
உலகளாவிய ரீதியில் பரவும் ஹன்டா வைரஸின் அறிகுறிகள் - அனைவர்க்கும் பகிரவும்

ஹன்டா வைரஸ்(Hantavirus) என்பது முக்கியமாக எலிகள் மற்றும் கொறித்துண்ணிகள் மூலம் பரவக்கூடிய ஒரு ஆபத்தான வைரஸ் தொற்று ஆகும். 

இது மனிதர்களின் சுவாசப் பாதையை பாதித்து கடுமையான உடல்நலக் கோளாறுகளை உண்டாக்கும்.

இந்த தொற்று எலிகளின் சிறுநீர், உமிழ்நீர் அல்லது எச்சிலில் உள்ள கிருமிகள், காற்றுடன் கலந்து மனிதர்கள் சுவாசிக்கும்போது பரவுகிறது.

மேலும், இந்த தொற்றின் அறிகுறிகளாக காய்ச்சல், குளிர், தசை வலி, வாந்தி, தலைவலி, மற்றும் கடுமையான சுவாசக் கோளாறுகள் போன்றவை காணப்படுகின்றன.

இதற்கென பிரத்தியேக தடுப்பூசிகளோ குறிப்பிட்ட மருந்துகளோ தற்போது இல்லை. எலிகள் நடமாட்டம் இருக்கும் இடங்களைத் தவிர்த்து சுகாதாரம் பேணுவது முக்கியம்.

இந்நிலையில், அட்லாண்டிக் பெருங்கடலில் சென்ற ஒரு சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவியதில், 3 பேர் உயிரிழந்துள்ளனர், 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், வைரஸ் தொற்றால் சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் ஒருவரும் பிரான்சில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!