தமிழக முதலமைச்சர் விஜய் பெறும் சம்பளம் எவ்வளவு? - ஆச்சரியமான தகவல்கள்.

#India #Tamil Nadu #Lanka4 #Vijay #ChiefMinister #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
தமிழக முதலமைச்சர் விஜய் பெறும் சம்பளம் எவ்வளவு? - ஆச்சரியமான தகவல்கள்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நடிகர் விஜய் அவர்களுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ சம்பளம் மற்றும் சலுகைகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முதலமைச்சருக்கு மாதமொன்றுக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் இந்திய ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. இது இலங்கை மதிப்பில் சுமார் 6,99,000 ரூபாய் ஆகும்.

இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்தியப் பிரதமரின் அடிப்படைச் சம்பளத்தை (1,66,000 ரூபாய்) விட தமிழக முதல்வரின் சம்பளம் அதிகமாகும்.

வழங்கப்படும் சலுகைகள்: சம்பளம் தவிர, முதலமைச்சருக்கு பின்வரும் உயர்மட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன: தேசிய பாதுகாப்பு படை அல்லது மாநிலத்தின் சிறப்பு பிரிவின் கீழ் இஸட் பிளஸ் (Z+) பாதுகாப்பு. குண்டு துளைக்காத சொகுசு வாகனங்கள் மற்றும் அவசர பயணங்களுக்காகத் தனி ஹெலிகாப்டர் வசதி.

இல்லம் மற்றும் அலுவலகம்: அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் பிரத்யேக இல்லம் மற்றும் அங்கு பணியாற்ற ஊழியர்கள். முழுமையான மருத்துவக் காப்புறுதி, இலவச பயண வசதிகள் மற்றும் பதவிக்காலத்திற்குப் பிறகு ஓய்வூதியம். இந்தியாவில் ஒரு மாநில முதலமைச்சரின் சம்பளத்தை அந்தந்த மாநில சட்டசபையே தீர்மானிக்கிறது.

அதிக சம்பளம்: தெலுங்கானா முதலமைச்சர் (4,10,000 இந்திய ரூபாய்). குறைந்த சம்பளம்: திரிபுரா முதலமைச்சர் (1,05,000 இந்திய ரூபாய்). தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள முதலமைச்சர் விஜய்க்கு வழங்கப்படும் இந்தச் சலுகைகள் மற்றும் அதிகாரங்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!